தேனியில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட தேசிய கொடி ஏந்திய மும்மதத்தினர்

தேனியில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட தேசிய கொடி ஏந்திய மும்மதத்தினர்
X

தேனியில் நடந்த ராயல் அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழாவில், மூன்று மதத்தினர்  தேசியக்கொடி ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி ராயல் அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் மும்மதத்தினர் தேசிய கொடி மத நல்லிணக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி ராயல் அரிமா சங்கம் சார்பில் 2022-2023 அரிமா வருடத்தின் நிர்வாகிகள் பணியேற்பு விழா நடந்தது. இந்த விழாவை மதச்சார்பற்ற, நமது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விழாவாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் இந்து குருக்கள், முஸ்லிம் இமாம் , கிறிஸ்துவ பாதிரியார் வந்திருந்தனர். விழாவிற்கு வந்த அனைவரும் தேசியக்கொடியுடன் ஒருங்கிணைந்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழா மதநல்லிணக்கம் மற்றும் தேச ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட விழா. நாட்டின் 75 ஆண்டு சுதந்திர தினவிழா நடைபெறும் நிலையில் தேசிய ஒருமைப்பாட்டை எடுத்துரைக்கவே விழா நடத்தினோம் என ராயல் அரிமா சங்க பட்டயத்தலைவர் செல்வகணேசன், மருத்துவர் ரவீந்திரநாத் பேசினர்.

Tags

Next Story
ai automation in agriculture