மனம் நெகிழச் செய்த தன்னம்பிக்கை

மனம் நெகிழச் செய்த தன்னம்பிக்கை
X

பெரியகுளம் பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டங்களை விற்கும் வியாபாரிகள்.

வாழ்வதற்கான வழிகள் பல கோடி என்ற தன்னம்பிக்கையினை பெரியகுளம் வியாபாரிகளிடமும் கற்கலாம்.

வாழ்வதற்கான வழிகள் பல கோடி என்ற தன்னம்பிக்கையினை பெரியகுளம் வியாபாரிகளிடமும் கற்கலாம். தன்னம்பிக்கை வியாபாரிகள் பல லட்சம் பேர்... பல கோடிப்பேர் உள்ளனர். இதற்கான பல உதாரணங்கள்... பல செய்திகளை நாம் படித்திருப்போம். பெரியகுளத்தில் கண்ட காட்சி தன்னம்பிக்கையினை கூட மனம் நெகிழச் செய்தது. அந்த அளவு ஒரு வாழ்வியல் போராட்டத்தை மிகவும் சந்தோஷமாக சிரித்த முகத்துடன் அந்த வியாபாரிகள் எதிர்கொண்டு வருகின்றனர். இப்போது மேலே உள்ள படத்தை பாருங்கள். பெரியகுளத்தில் நகராட்சி அலுவலகத்தினை அடுத்து, அரசு மருத்துவமனை செல்லும் ரோட்டோரம் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளிக்கு முன்பாக தின்பண்டங்களை விற்க கடை போட்டிருப்பார்கள். இது எல்லாப்பள்ளிகளிலும் இருக்கும். காலை, மாலை பள்ளி இடைவேளை நேரங்களில் பள்ளியின் மெயின் கேட் திறப்பதில்லை. இதனால் கேட் முன்பாக தங்களது எடுப்பு கடையினை விரித்திருக்கும் வியாபாரிகள், அந்த பத்து நிமிட இடைவெளியில், கேட்டுக்கு வெளியே நின்று கொண்டு, கேட்டுக்கு உள்ளே இருக்கும் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து விடுகின்றனர்.

இந்த போராட்டமான வியாபாரம் பள்ளி நாட்களில் நடக்கும் தினசரி சம்பவம் தான். இது எங்களுக்கு மிகவும் பழகிப்போய் விட்டது என்று சிரித்த முகத்துடன் இந்த வியாபாரிகள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு தொந்திரவு கொடுக்காமல், இப்படி வியாபாரம் செய்ய, மிகுந்த மனிதநேயத்துடன் அனுமதித்த பள்ளி நிர்வாகத்தையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.



Tags

Next Story
Weight Loss Tips In Tamil