சீனாவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தனக்கு சாதகமாக்கும் இந்தியா...!

சீனாவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கலை  தனக்கு சாதகமாக்கும் இந்தியா...!
X
சீனாவில் எப்பொழுதாவது மக்கள் கொந்தளிப்பு வரும். இப்பொழுது பெரிய மக்கள் கிளர்ச்சியில் சிக்கியுள்ளது சீனா

1989க்கு பின் பெரிய சிக்கலாக இதுதான் பார்க்கப்படுகின்றது. சீனாவில் ஒரே ஆட்சிதான் உண்டு, அங்கு ஆட்சியாளர்கள் மாறலாமே தவிர அரசின் திட்டம் கொள்கை மாறாது. இதனாலும் பலகோடி மக்கள் ஊழியர்களாய் கிடைப்பார்கள் என்பதாலும் உலக நாடுகளின் விருப்பமான முதலீட்டு நாடு சீனா தான்.

முதலீட்டுக்கு உத்திரவாதம், அரசின் பாதுகாப்பான பொருளாதார கொள்கைகள், இந்த யூனியன் இம்சைகள், போர்க் குரல்கள், சமத்துவ சல்லிகள், போனஸ் பிரச்சினை , வேலை நிறுத்தம் என எதுவும் இல்லாததால் லாபம் கொழிப்பதாலும் உற்பத்தி இடைவிடாது நடப்பதாலும் முதலீட்டாளர்களுக்கு சீனா சொர்க்கமாகத்தெரிந்தது.

1975ல் மாவோ செய்த அந்த திருத்தத்தை டென் ஜியோ பிங் அப்படியே இன்னும் தொடர சீன பொருளாதாரம் சீற தொடங்கியது. உண்மையில் அங்கு கம்யூனிசமும் இல்லை. தொழிலாளர் நலனுமில்லை. மாறாக நாட்டுக்கு எது நலமோ அதை செய்கின்றார்கள்.

இப்படி வளர்ந்த சீனா 1990ன் பொருளாதார மயமக்கால் பின் மேலும் வளர்ந்து ஏகபட்ட வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வலுவானது, கோடிகணக்கான மக்கள் ஆயிரகணக்கான தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றார்கள். சீனாவுக்கான முதல் சிக்கல் டிரம்ப் காலத்தில் வந்தது. சீனாவின் இந்த பொருளாதார ஆதிக்கம் வருங்காலத்தில் அமெரிக்காவுக்கு சவாலாகும் என கருதிய அவர் மோதலை தொடங்கி வைத்தார், மெல்ல மெல்ல சிக்கலில் வீழ்ந்தது சீனா.

அங்கு தொழில் முடக்கம் மெல்ல ஏற்பட்டது. அமெரிக்க சிக்னலில் பல கம்பெனிகள் வேறு நாடுகளுக்கு மாறின, இந்தியா போன்ற நாடுகள் பலவற்றை ஈர்த்தன. "போக்ஸ்கான்" போன்றவை இங்கு அப்படித்தான் மோடி அரசால் இழுத்து வரப்பட்டது. இதனை குழப்ப சீனா தன் இந்திய கைகூலிகளால் ஏற்படுத்திய முயற்சி தோல்வியே கொடுத்தது வேறு விஷயம். இந்தியா இப்பொழுதெல்லாம் வலு கவனமாக தொழிலை ஈர்த்து பாதுகாப்பும் கொடுக்கின்றது.

இந்நிலையில்தான் கோவிட் வந்தது சீனாவுக்கு இன்னும் சிக்கலானது. கொரோனாவினை கொடுத்த நாடு சீனா அதனால் பாதிக்கப்பட்டதும் அவர்களே தான், அவர்களின் சரியான தயாரிப்பு என எதுவுமில்லை அவ்வகையில் கொரோனா மருந்தும் அங்கு விஷேஷமில்லை, நோய் எளிதில் கட்டுப்படுத்தப்படவில்லை.இங்கு சீன அரசு சில கடுமையான காரியங்களை செய்தது. அவர்களின் "பூஜ்ஜியம் கோவிட்" கொள்கை என்பது கடுமையானது. கொரோனா கால முடிவில் கடந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கை நடத்தும் பொருட்டும் கொரோனாவினை முழுக்க ஒழிப்போம் என்றும் அதனை அறிவித்தார்கள்.

அதன்படி ஒரு நகரில் ஒருவருக்கு கொரோனா என்றால் ஊரே பூட்டப்படும், சில வாரங்கள் அந்த ஊரடங்கு இருக்கும். இது முதலில் சரியானது, ஆனால் எதற்கெடுத்தாலும் ஒவ்வொரு நகரை பூட்டுவதும் பின்வாரகணக்கில் அடைப்பதும் சிக்கலானது.இப்படி ஊரை பூட்டும் சீன அரசு , கம்பெனிகளை பூட்டாது ஆனால் கம்பெனியில் இருந்து யாரும் வெளியேற தடை உள்ளே செல்ல தடை என கடும் கட்டுபாடுகளை விதித்தது.

முன்புபோல் அல்லாமல் சீன பொருளாதாரம் தடுமாற தொடங்கி சில ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் உற்பத்தி அவசியம் என்பதால் ஒருபக்கம் கோவிட் குழப்பம் என்றாலும் இன்னொரு பக்கம் கடும் கட்டுப்பாட்டில் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.ஆடு மாடுகளைப் போல அவர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதும் இன்னும் பல அடக்கு முறைகளும் ஆங்காங்கு வெடித்தன. சீனாவின் போக்ஸான் நிறுவனத்தில் மட்டும் 2 லட்சம் பணியாளர் உள்ளனர். இவர்களில் பாதிப்பேர் அரசின் கொள்கை பிடிக்காமல் வெளியேறினர். உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

இவையெல்லாம் கம்பெனி அல்ல. மாபெரும் தொழிற்பேட்டை பல லட்சம் குடியிருப்புக்கள் கொண்ட நகரங்கள். அப்படி உருவாக்கி வைத்திருந்தது சீன அரசு. இங்கு தான் குழப்பம் ஏற்பட்டு வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்த போக்ஸான் கம்பெனி ஐபோன் தயாரிப்புடன் தொடர்புடையது. இதனால் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த சிலநாள் போராட்டத்தால் பல்லாயிரம் கோடி எனும் பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக ஆப்பிள் நிறுவணம் புலம்ப தொடங்கிற்று.

சீன அரசோ கண்களை உருட்டிற்று. ஆனால் இந்த கோவிட் 19, புதிய பொருளாதார கொள்கை என சீன அரசின் மேல் கடும் ஆத்திரம் கொண்ட மக்கள் பொங்கி விட்டனர். உண்மையில் இதற்கு ஜி ஜின்பெங் மூன்றாம் முறை பதவிக்கு வந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை.ஒருவித வெறுப்பு அவர்களுக்கு வந்து விட்டது. பெரும் கனவில் உலகெல்லாம் ஒன்பெல்ட் ரோடு, பல நாடுகளில் ராணுவ நிலையம் என சீனா அகல கால்வைப்பதும் தைவானுடன் சும்மா போக்கு காட்டுவதும் ஜின்பெங்கின் அடக்குமுறை பிடிக்காததும் மக்கள் வெறுக்க முக்கிய காரணம். மேலும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியும் இன்னொரு காரணம்.

ஏற்கனவே டிரம்ப் தொடங்கி வைத்த அடியில் சீனா சிக்கியதும், அதை தொடர்ந்து கோவிட்டும் அதை சீனா சமாளிக்க கடும் அடக்கு முறைகளை கொடுத்ததும் இப்பொழுது சிக்கலாகிவிட்டது.டிரம்ப் காலத்திலே பல கம்பெனிகள் சீனாவினை விட்டு அகன்றன. வியட்நாம் இந்தியா பிலிப்பைன்ஸ் என அவை களமிறங்கின. இப்பொழுது சீனாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு முதலீடு செய்த கம்பெனிகள் வேறுநாடுகளை தேர்வு செய்கின்றது. அவற்றின் பார்வையில் இந்தியா தென்படுகின்றது.

பலமான பிரமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலாவின் பொருளாதார கொள்கைகள் என பல நல்ல காரணங்கள் இதற்கு உள்ளன. இப்பொழுது 4 சதவீதத்தில் இருக்கும் இந்திய பங்களிப்பை இனி 40 சதவீதமாக்குவோம் என்கின்றது போக்ஸ்கான்.இது ஒரு கம்பெனி என்ற நிலையில் எத்தனையாயிரம் கம்பெனிகள் இந்தியாவுக்கு வரும் என்பதை நினைத்தால் மிக வளமான எதிர்காலம் இந்தியாவுக்கு உண்டு.

ஆனால் மோடி எதிர்ப்பு என அரசியல் செய்யும் சீன கைகூலிகள் அந்நிய கைகூலிகள் என்னென்ன குழப்பங்களை ஏற்படுத்துவார்கள் என்பதுதான் தேசத்தின் கவலை. எனினும் இந்திய உளவுத்துறையும் பாதுகாப்பு அமைச்சகமும் பெரும் விழிப்பில் இருக்கின்றன. என்.ஐ.ஏ உள்ளிட்ட இந்திய அமைப்புக்களும் உளவுதுறைகளும் குழப்பம் ஏற்படுத்துவோரை குறிவைத்து முடக்குகின்றன. இந்தியா மிகபெரிய தொழில்வாய்ப்புள்ள இடமாக மோடி ஆட்சியில் மாற வாய்ப்பு உண்டு. சீன குழப்பம் தொடர்கின்றது, 1989ல் ஜனநாயகம் வேண்டி ஏற்பட்ட போராட்டம். 2010களில் நடந்த ஹாங்காங்க் போராட்டமெல்லாம் வேறுவகை, இந்த கிளர்ச்சி வேறுவகை.

அதாவது மக்கள் ஒருமாதிரியானவர்கள், ஒரு அரசு தங்களை நன்றாக வாழவைத்து பாதுகாத்தால் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள், அரசு வருமான குறைவை செய்தாலும், பொருளாதார பாதிப்பை கொடுத்தாலும் பொறுக்கமாட்டார்கள்இது உலக இயல்பு. இப்பொழுது எழுந்திருப்பது ஜின்பெங் அகலகால் வைத்து இழுத்து கொண்ட பின்னடைவு என சீன மக்கள் கருதி அவருக்கு எதிராக பொங்குகின்றார்கள், அதுவும் மூன்றாம் முறை அவர் வந்திருக்க கூடாது என போராடுகின்றார்கள்

பீஜிங் , ஷாங்காய் என முக்கிய நகரமெல்லாம் போர்கோலமாக காட்சியளிக்கின்றது, பல துப்பாக்கி சூடுகளும் உண்டு என்பதால் விஷயம் மிகவும் சீரியசாகத்தான் இருக்கின்றது. ஜின்பெங் எப்படி சமாளிக்கபோகின்றார் என்பதுதான் தெரியவில்லை.ஆசியாவில் சீனாவுக்கு எழும் சிக்கலை இந்தியா தனக்கு சாதகமாக வளைத்து கொண்டிருக்கின்றது, மோடி எனும் அருந்தலைவன் அச்சாதனையினை செய்கின்றார். தேசமக்கள் ஒத்துழைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா மாபெரும் வளர்ச்சியினை காட்டும் அது நிச்சயம்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!