அடேங்கப்பா..தேனி மார்க்கெட்டில் அயிரை மீன் விலை இவ்வளவா..?
அயிரை மீன்.
Fish Market Rate Today- தேனி மாவட்டத்தில் போடி குரங்கனி மலைப்பகுதிகளிலும், சோத்துப்பாறை, மஞ்சளாறு மலைப்பகுதிகளிலும், கூடலுார், கம்பம், ராயப்பன்பட்டி, உத்தமபாளையம் பகுதிகளிலும் அயிரை மீன் பிடிக்கப்படுகிறது.
நீர் வரத்து குறைவாக இருக்கும் காலங்களில் தான் அயிரை மீன் பிடிக்க முடியும். தற்போது இப்பகுதிகளில் மும்முரமாக மீன் பிடித்து வருகின்றனர். இதன் சுவைக்காக மீன் பிரியர்கள் முன்பதிவு செய்து வாங்குகின்றனர். மீன் பிடிக்கச் செல்பவர்களிடம் முதல் நாளே பணம் கொடுத்து விடுகின்றனர்.
ஒரு கிலோ அயிரை மீன் 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தவிர சில இடங்களில் வியாபாரிகள் மீனை வாங்கி தண்ணீர் தொட்டிகளில் பதப்படுத்தி பெருநகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கும் அனுப்புகின்றனர். இதனால் மீன் பிடிப்பவர்களுக்கு ஒரளவு நல்ல சம்பளம் கிடைத்து வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu