இந்தியாவிற்கு சவால் இந்தியா மட்டுமே
அறுபத்திமூன்று ஆண்டுகளுக்கு முன் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட ராக்கெட் உதிரி பாகங்கள்.
இந்தியாவிற்கு சவால் இந்தியா மட்டுமே. இன்றைக்கு உலகின் எந்த ஒரு நாடும் இதுவரையில் செய்யாத சாகசங்களை எல்லாம் மிக அசாதாரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செய்து வருகிறது. அதில் ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இரண்டு விண்வெளி சாதனைகளை மட்டும் காணலாம்.
உலக விண்வெளி வரலாற்றிலேயே முதன் முறையாக 104 செயற்கைகோள்களை தூக்கிக் கொண்டு, 2017 பிப்ரவரி 15 காலை விண்வெளிக்கு வெற்றிகரமாக பறந்தது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் PSLV-C37 ராக்கெட்.
அந்த மகத்தான சாதனையைப் பற்றி சில துளிகள் பார்க்கலாம்.
1.Polar satellite launch vehicle என்றொரு கம்பீரமான விரிவாக்கத்தை தன்னுள்ளே அடக்கிக் கொண்டு PSLV என்று சுருக்கமாக காட்சி தருகிறது இந்த ராக்கெட்.Sun synchronous orbit ல் கொண்டு போய் செயற்கைகோள்களை விட்டு விடும்.
2.Sun synchronous orbit என்றால்,பூமி சூரியனை பார்க்கும் கோணத்தில் என்று பொருள்.சூரியனை பார்ப்பது போல,இந்த Sun synchronous orbit ல் இருக்கும் செயற்கைகோள்களையும் பூமி பார்க்கும். இந்த Sun synchronous orbit ல் வைக்கப்படும் செயற்கை கோள்கள் பூமியோடு சேர்ந்து சூரியனைச் சுற்றாது. இதனால் செயற்கைகோள்கள்களுக்கு தொடர்ச்சியாக சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கும்.
3.C37 என்பது PSLV வரிசையில் 39 வது பயணம்.
4.ராக்கெட்டின் எடை 320 டன்கள் தான். அதில் அந்த 104 செயற்கைக்கோள்களின் எடை 1378 கிலோக்கள்.
5.அமெரிக்காவின் Planet என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான 88 செயற்கைக் கோள்கள், Spire Global என்ற அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான 8 செயற்கைகோள்கள், நெதர்லாந்து நாட்டின் ஒரு செயற்கைகோள், சுவிட்சர்லாந்தின் ஒரு செயற்கைகோள், இஸ்ரேலுக்கு ஒன்று, அமீரகத்தின் ஒரு செயற்கைகோள், அது போக இந்தியாவின் கார்ட்டோசாட் செயற்கைகோள்கள் 2 என மொத்தம் 104 செயற்கைக்கோள்கள் விண்ணுக்குப் பறந்தன.
6.PSLV விண்ணுக்கு சென்ற பத்தாவது நிமிடத்தில் 101 செயற்கைகோள்கள் விண்ணில் தனித்துவிடப்பட்டது.அப்படி விடும்போது அந்த செயற்கைக்கோள்கள் மணிக்கு 27000 கிமீ வேகத்தில் பயணிக்கும்.இந்த வேகம் ஒரு பயணிகள் விமானத்தின் சராசரி வேகத்தை விட 40 மடங்கு அதிக வேகமாகும்.
7.இப்படியான ஒரு சாதனை உலக விண்வெளி வரலாற்றில் இதுவே முதன்முறை.இதற்கு முன் ரஷ்யா 37 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்பியது.இந்தியா ரஷ்யாவை விட மூன்று மடங்கு அதிக செயற்கைகோள்களை ஒரே ஒரு ராக்கெட்டில் அனுப்பியது.
அடுத்த சாதனை...சமீபத்தில் காணாமல் போன 2000 ரூபாய் நோட்டு எதாவது கையில் இருக்கிறதா? இருந்தால்,அதை எடுத்து அதன் பின் பக்கம் பாருங்கள். அதில் ஒரு விண்கலம் அச்சிடப்பட்டு இருக்கும்.
அது என்ன விண்கலம்? ரூபாய் நோட்டில் போடும் அளவிற்கு அது செய்த சாதனை என்ன?...என்ற கேள்விகள் இப்போதாவது வருகிறதா? அந்த விண்கலத்தின் பெயர் தான் மங்கள்யான்....
அது அப்படி என்ன சாதனைகளை செய்தது?
சுருக்கமாக நான்கு காரணங்கள்.
1.Escape Velocity-பூமியின் புவியீர்ப்பு விசையை சமாளித்து, பூமியின் வளிமண்டலப் பரப்பை விட்டு வெளியேற ஒரு பொருள் பயணிக்க வேண்டிய வேகத்தின் அளவு தமிழில் விடுபடு திசைவேகம். இது 11.2 கி.மீ/செகன்ட் என இருக்க வேண்டும்.இந்த அளவை விட அதிகமான வேகத்தில் ஒரு பொருள் பூமியை விட்டு வெளியே பயணித்தால் அது காற்றின் உராய்வினால் தீப்பற்றி எரிந்து விடும். குறைவான வேகமாக இருந்தால் பூமியைத் தாண்டவே முடியாது. பூவியீர்ப்பு விசை கீழே பிடித்து இழுத்து விடும்.
ஆனால் மங்களயான் எஸ்கேப் வெலாசிட்டி வேகத்தில் அனாயசமாக கடந்து சென்றது.இது வரை அனுப்பப்பட்ட செயற்கைகோள்களும், ராக்கெட்களும் இதைக் கடந்து தானே சென்றன? இதில் என்ன பெருமை என்ற கேள்வி வரலாம்...
ஆம்.இதுவரையில் அனுப்பப்பட்ட அத்தனை செயற்கைகோள்கள் மற்றும் ராக்கெட்களின் எடைகள் எல்லாம் பல நூறு கிலோக்களுக்கு மேல் இருந்தன.ஆனால் மங்கள்யானின் எடை வெறும் 15 கிலோ மட்டுமே.இவ்வளவு எடைக்குறைவான ஒன்றை பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி அனுப்புவது சாதாரண வேலை அல்ல.திறமையான டிசைன் வேண்டும்.உச்சபட்ச தொழில் நுட்பம் வேண்டும்.நம் விஞ்ஞானிகள் இதைச் செய்தார்கள்.
2.செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்புவதென்றால் ஒரு ராக்கெட்டை எடுத்து வான்வெளியில் செவ்வாய் கிரகம் இருக்கும் திசையைப் பார்த்து அனுப்புவதல்ல.அதற்கு ஏகப்பட்ட கணக்கீடுகளைச் செய்ய வேண்டும். சூரியக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும்-ஒவ்வொரு வேகத்தில்,ஒரு நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும்.செவ்வாயின் வேகம் வேறு. பூமியின் வேகம் வேறு.நீள்வட்டப்பாதையிலேயே ஒவ்வொரு கோளும் சுற்றுவதால் ஒரு ஒவ்வொரு கோளும்-தன் பக்கத்திலுள்ள கோளுக்கு-ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மிக அருகே வரும்.அந்தப் புள்ளியை Perigee என்பார்கள்.அப்படி செவ்வாய்க்கும்-பூமிக்குமிடையிலான அந்த Perigee க்கணக்கிட்டு, அந்தப் புள்ளியில் ராக்கெட்டை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் செவ்வாயின் தூரம் கூடும். செலவும் எகிறும். அதோடு செவ்வாயின் சுற்று வேகத்தில் கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.
நம் ஆனால் நம் விஞ்ஞானிகள் Perigee யை துல்லியமாகக் கணக்கிட்டு மங்கள்யானை கொண்டு சென்றார்கள். செவ்வாயின் சுற்று வேகத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யானைச் சுற்றச் செய்தார்கள்.
3.அப்படி செவ்வாயைச் சுற்றச் செய்யும் போது-மங்கள்யானின் கிரையோஜனிக் என்ஜின்களை பூமியிலிருந்து தான் இயக்க வேண்டும். இங்கே தான் ஒரு சவால்.பூமியில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் மங்கள்யானைச் சென்றடைய 12 நிமிடங்களாகும்.மங்கள்யானிடமிருந்து பதில்கள் வரவும் இதே 12 நிமிடங்கள் தேவைப்படும்.ஆக அடுத்த 12 நிமிடங்கள் கழித்து மங்கள்யான் எப்படி இயங்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும்.ஒரு கட்டளையைப் பூமியில் இருந்து அனுப்பினால்,அது 12 நிமிடங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்று இந்தக் கணத்திலேயே தீர்மானிக்க வேண்டும். அது எவ்வளவு சவாலான பணி!!அதையும் நம் விஞ்ஞானிகள் செய்து முடித்தார்கள்.
4.இந்த துல்லியப் பணிகளை எல்லாம் நம் விஞ்ஞானிகள் தங்களது எத்தனையாவது முயற்சிகளில் செய்தார்கள் தெரியுமா? முதல் முயற்சியில்... ஆம் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தார்கள். ஆனானப்பட்ட அமெரிக்காவே செவ்வாய் பயணத்தை 51 முறைகள் முயற்சி செய்து அதில் 21 முறைகளே வெற்றியடைந்தது. இந்தியா தன் முதல் முயற்சியிலேயே-சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து-அடித்த அந்த பந்து ஸ்டேடியத்தைத் தாண்டியது.ஆம்.அப்படிப்பட்ட நெத்தியடியாக அமைந்தது,"மங்கள்யானின்" பயணம்.
5.இவற்றிக்கெல்லாம் மேலாக இருந்தது மங்கள்யான் திட்டத்திற்கான செலவு தான்.அமெரிக்கா செவ்வாய் பயணத்திற்குச் செய்த செலவை வைத்து இந்தியாவின் பொது பட்ஜெட்டையே முடித்து விடலாம்.ஆனால் மங்கள்யான் திட்ட செலவு எவ்வளவு தெரியுமா? வெறும் 454 கோடிகளில்!
இது அவதார் படத்தின் பட்ஜெட்டை விட,டைட்டானிக் படத்தின் பட்ஜெட்டை விட,இண்டர்ஸ்டெல்லார் படத்தின் பட்ஜெட்டை விட,பாகுபலி, பொன்னியின் செல்வன் படங்களின் பட்ஜெட்டை விட குறைவு...63 வருடங்களுக்கு முன்னர் சைக்கிளில் தொடங்கியது இஸ்ரோ வின் பயணம்.இன்றைய தேதியில் விண்வெளி துறையில் இந்தியா விற்கு சவால் இந்தியா மட்டும் தான்....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu