ஒரே மாநிலத்தில் ஒன்பது தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு
பைல் படம்
இந்தியாவில் இயற்கை வளங்களும், கனிம வளங்களும் கொட்டிக்கிடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் கண்டறிந்த பின்னர், அந்த பகதிகளை ராணுவமே தன் வசம் கொண்டு வந்துள்ளது. இங்கிருந்து லித்தியம் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்க உள்ளது. அதற்குள் இந்தியாவிற்கு அடுத்த ஜாக்பாட் அடித்துள்ளது. ஆமாம் உலகின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் தங்கம் இந்தியாவில் கொட்டிக்கிடக்கிறது. அதுவும் ஒரே மாநிலத்தில் ஒன்பது சுரங்கங்கள் கண்டறிப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரபுல்லா மாலிக் பேரவையில் தெரிவித்துள்ளார். எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் ஆய்வு மைய இயக்குநரகம் நடத்திய ஆய்வில், ஒடிசாவின் தியோகார், கியோஞ்ஜஹார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மூன்று தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். கியோஞ்சஜார் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் தலா நான்கு இடங்களிலும், தியோகார் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பூமிக்கடியில் தங்கம் புதைந்துகிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, ஒடிசா மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் 9 இடங்களில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் பிரபுல்லா மாலிக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காஷ்மீரில் லித்தியம் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒடிசாவில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும். இந்தியா வேகமாக வளரும் நிலையில், இத்தைகய புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சி வேகத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் எனவும் ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu