எல்.இ.டி. பல்பு கொள்முதல் ஊழலில் சிக்கியவர்கள் யார்? யார்?

கடந்த 2019 -20 ல் தேனி மாவட்ட பேரூராட்சியில் நடந்த ஒரு கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் ஊழல் சம்பந்தமாக தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது 1200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பல்பினை 9987 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். இதற்கு போலி பில்களும் தயாரித்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
மதுரை ஐகோர்ட் கிளையிலும் வழக்கு தொடர்ந்தார். பேரூராட்சி தலைவரும், வழக்றிஞருமான மிதுன்சக்கரவர்த்தி இந்த வழக்கில் ஆஜர் ஆனார். ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், க.புதுபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆண்டவர், உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.பாலசுப்ரமணி, கோம்பை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், பூதிப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், தேவதானப்பட்டிப் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், ஓடைப்பட்டி பேரூராட்சி செயலாளர் பசீர் அகமது ஒப்பந்ததாரர்கள் ஜமுனா, ரவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu