மூக்கை பிடித்துக் கொண்டு படிங்க...! இப்படி எல்லாமா? சிக்கல் வரும்...!

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மூக்கம்மாள் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் மதன் அப்போது ஒரு பிரச்னையை எழுப்பினார். அது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கோகிலாபுரம் ஊராட்சியும், ராயப்பன்பட்டி ஊராட்சியும் அடுத்தடுத்து உள்ளன. கோகிலாபுரம் ஊராட்சிக்கு சொந்தமான பெண்கள் கழிப்பறை இரண்டு கிராமங்களுக்கும் நடுவில் உள்ளது. இந்த கழிப்பறையை கோகிலாபுரம் ஊராட்சி பெண்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக ராயப்பன்பட்டி ஊராட்சி பெண்கள் தான் பயன்படுத்துகின்றனர். ராயப்பன்பட்டி கிராம பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையினை நாம் ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என நினைத்து கோகிலாபுரம் ஊராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களை அனுப்புவதில்லை.
கோகிலாபுரம் ஊராட்சிக்கு சொந்தமான கழிப்பறையினை நாம் ஏன் சுத்தப்படுத்த வேண்டும் என ராயப்பன்பட்டி கிராம ஊராட்சி நிர்வாகமும் துப்புரவுப்பணியாளர்களை அனுப்புவதில்லை. ஆக, பல நாட்களாக பந்தாடப்பட்டு வரும் அந்த கழிப்பறை சுத்தம் செய்யப்படாமலேயே உள்ளது. இதனைபயன்படுத்தி வரும் ராயப்பன்பட்டி கிராம ஊராட்சி பெண்களின் சுகாதாரம் என்னவாகும் என நினைத்துப்பாருங்கள்.... அந்த கழிப்பறையில் இருந்து வரும் துர்நாற்றம் அப்பகுதியில் செல்பவர்களையும், வசிப்பவர்களையும் துரத்தி அடிக்கிறது. இந்த பிரச்னைக்கு என்ன தான் தீர்வு என கேட்டார். இதனை கேட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், 'வெகு விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu