ஊழலுக்கு எதிரான போர் தொடரும் - பிரதமர் மோடி பகிரங்கமாக அறிவிப்பு

ஊழலுக்கு எதிரான போர் தொடரும் -  பிரதமர் மோடி பகிரங்கமாக அறிவிப்பு
X
பிரதமர் மோடி மத்திய பிரதேசம் மாநிலம் பாலகாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உணர்வு பெருக்க உரையாற்றினார்.

இண்டியா கூட்டணி கட்சியினருக்கு எதிரான சாடலாக தனது உரையை மோடி தொடங்கினார். “மோடியின் வெற்றியை தடுப்பதற்காக உருவான இண்டியா கூட்டணி கட்சியினர், கடைசியில் மோடியை மறந்து விட்டு தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தனர். மக்கள் மீதான அவர்களின் அக்கறை அவ்வளவு தான்” என்று கிண்டலடித்தார்.

அதன் பின்னர் நகைச்சுவையிலிருந்து சீரியஸ் மோடுக்கு தாவிய மோடி, “உண்மையில் அவர்கள் மோடியை தடுக்க விரும்பவில்லை. இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் நாட்டின் வளர்ச்சியை தடுக்க விரும்புகிறார்கள். அதனால்தான் என்னை துஷ்பிரயோகம் செய்து மிரட்டுகின்றனர். நாட்டிற்கு சேவை செய்யும் பணிக்காக அனைத்தையும் துறந்தேன்; இப்போது மோடிக்கு பாரதம் என்பதே குடும்பம். ஆனால் சொந்த கஜானாவை நிரப்ப அரசியலுக்கு வந்தவர்கள் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்'' என்று இண்டியா கட்சியினரை கடுமையாக அவர் சாடினார்.

“நான் ஊழலை ஒழிக்க சொல்கிறேன்; அவர்களோ ஊழல்வாதிகளை காப்பாற்றுங்கள் என்கிறார்கள். கூட்டணி கட்சியினருக்கு என் மீது ஏன் இந்த பகை? ஏனெனில் நான் அவர்களின் கஜானாக்களில் சேர்ந்துள்ள ஊழல் பணத்தை அம்பலப்படுத்தி வருகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் அதற்கான பணிகள் இன்னும் வேகமாக நடக்கும்" என்று பிரதமர் மோடி சூளுரைத்தார்.

”பரம்பரை கட்சிகளிடம் பல நூறு கோடி ரூபாய்கள் பணம் கொட்டில் கிடக்கிறது. அந்த பணத்தை எண்ணும் போது நோட்டு எண்ணும் இயந்திரம்கூட சோர்வடைந்து பழுதடைகிறது. ஆனால், காங்கிரஸார் வெளிப்படையாகவும், வெட்கமின்றியும் ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தக் கோரி கூட்டங்களை நடத்துகின்றனர்.

நாட்டின் பாதுகாப்புக்கு மோடி உத்தரவாதம் அளிக்கும் போது, அவர்கள் என்னை தவறாக பயன்படுத்துகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் உத்தரவாதத்தை மோடி நிறைவேற்றியதும், அவர்கள் பாக்கிஸ்தான் மொழியில் பேசத் தொடங்குகின்றனர்" என்றும் சீற்றத்துடன் பிரதமர் மோடி முறையிட்டார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil