ஆதிமுனீஸ்வரர் கோயில் கட்ட நிலம் வழங்கிய விவசாயி

ஆதிமுனீஸ்வரர் கோயில் கட்ட நிலம் வழங்கிய விவசாயி
X

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் ஆதிமுனீஸ்வரர் கோயில் கட்ட தேவையான இடத்தினை விவசாயி சுருளிமல்லு, இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் செங்கல்காளவாசல் அருகே ஆதிமுனீஸ்வரர் கோயில்கட்ட விவசாயி சுருளியப்பன் என்ற நிலம் வழங்கினார்

தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டியில் விளைநிலங்களுக்கு செல்லும் வழியில் ஆதிமுனீஸ்வரர் கோயில் உள்ளது. விவசாயிகள் இந்த முனீஸ்வரர் கோயிலை வணங்கிய பின்னரே தங்கள் நிலங்களில் விதைப்பு, அறுவடை பணிகளை தொடங்குவார்கள். ஆதிகாலத்தில் இருந்து இந்த கோயில் இருப்பதால் ஆதிமுனீஸ்வரர் என பெயர் பெற்றது.

இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோயிலில், கன்னிமார் பூஜை, சுமங்கலி பூஜைகள் நடந்தன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராஜ்ஜீ, இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன்.ரவிஜீ, தலைவர் ராமராஜ்ஜீ, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஜீ, மாவட்ட பொருளாளரும், யோகா ஆசிரியருமான செந்தில்குமார்ஜீ, உட்பட பலர் கலந்து கொண்டனர். கோயில் அமைய உள்ள இடத்தின் பத்திரத்தை விவசாயி சுருளியப்பன் என்ற சுருளிமல்லு, இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன்ரவியிடம் வழங்கினார். இங்கு சிறப்பான முறையில் முனீஸ்வரர் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா