‘‘வாக்கு செலுத்தும் கடமை’’ தவறாமல் செய்யுங்கள்..!

‘‘வாக்கு செலுத்தும் கடமை’’ தவறாமல் செய்யுங்கள்..!
X

இந்து எழுச்சி முன்னணியின் வாரவழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி காரியாலயத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி காரியாலயத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. தேனி நகர அமைப்பாளர் முத்துராஜ்ஜீ தலைமை வகித்தார். தேனி மாவட்ட துணைத்தலைவர் விஷ்வா பாலமுருகன்ஜீ முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் ராமராஜ்ஜீ வழிநடத்தினார். ஏராளமான நிர்வாகிகள் , உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

வருகின்ற ஏப்ரல்19 ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தங்களது முக்கிய ஜனநாயக கடமையான "வாக்கு செலுத்தும்" கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என வாக்காளப் பெருமக்களை இந்து எழுச்சி முன்னணி அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

தேனி பொம்மைகவுண்டன்பட்டி பாலன் நகர் சாலை மற்றும் 1-வது வார்டு சாலை வடக்கு தெரு போன்ற இடங்களில் சாலைகளை செப்பனிட்டு தர வேண்டுமாய் நகராட்சி நிர்வாகத்திற்கு இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை வைத்திருந்தது. இன்னும் சில தினங்களில் அதனை சரி செய்து தருவதாக உறுதி கூறிய நகராட்சி நிர்வாகத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறது.

பிற உயிர்களுக்கு உணவு வழங்குதல் இந்த உலகில் செய்யப்படும் மிகப்பெரிய தர்மம் ஆகும். எனவே இந்து எழுச்சி முன்னணி சார்பில் வீரப்பஅய்யனார் கோயில் திருவிழாவின் போது உணவு, தண்ணீர் வழங்கப்படும். சித்திரை முதல் தேதி நடைபெறும் வீரப்பஅய்யனார் கோயில் திருவிழாவிற்காக மிகுந்த தரமான ரோடு வசதி செய்து தர வேண்டும். பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் வீரப்பஅய்யனாரை வழிபட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
photoshop ai tool