நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலி பசுக்கள் பலத்த காயம்

நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலி  பசுக்கள் பலத்த காயம்
X
தேவாரம் அருகே நாய் கடித்ததில் இரண்டு ஆடுகள் பலியானது. பசுக்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது

தேவாரம் அருகே டி.சொக்கலிங்காபுரம் கிராமத்தில் நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலியாகின. பசுக்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தேவாரம் அருகே தம்பிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட டி.சொக்கலிங்காபுரம் கிராமத்தில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. நாய் தொல்லையால் சிறுவர்களும், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நாய் கடித்து இரண்டு ஆடுகள் உயிரிழந்து உள்ளது. மூன்று பசுக்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த கிராமத்தில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story