தேனி மாவட்ட ஆட்சியரிடம் புத்தகம் கேட்ட மாற்றுத்திறனாளி சிறுவன்

தேனி மாவட்ட ஆட்சியரிடம் புத்தகம் கேட்ட  மாற்றுத்திறனாளி சிறுவன்
X

தேனி கலெக்டர் முரளீதரனிடம் மாற்றுத்திறனாளி சிறுவன் புத்தகம் கேட்டு வாங்கினான்.

தேனி ஆட்சியர் முரளீதரனிடம் மாற்றுத்திறனாளி சிறுவன் தனக்கு புத்தகம் வாங்கித்தருமாறு கேட்டு வாங்கினார்

நலத்திட்ட உதவி வழங்க வந்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரனிடம் புத்தகம் கேட்ட மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் புத்தகங்கள் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. முடிந்ததும் ஆட்சியர் முரளீதரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது நலத்திட்ட உதவி பெற வந்த தேனி அல்லிநகரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் மகன் சிறுவன் பாண்டீஸ்வரன் தனக்கு நல்ல புத்தகம் வழங்க வேண்டும் என ஆட்சியர் முரளீதரனிடம் கேட்டார். இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த ஆட்சியர், உடனடியாக தன்னிடம் இருந்த புத்தகத்தை வழங்கியதோடு, சிறுவனுக்கு தேவையான பாடப்புத்தகம் உட்பட அத்தனை புத்தகத்தையும் தான் வாங்கித்தருவதாக உறுதி அளித்தார். இதைப்பார்த்த பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது