/* */

தேனியில் இருண்டு கிடக்கும் விரிவாக்க பகுதிகள்..!

தேனி நகராட்சியில் விரிவாக்க பகுதிகளில் தெருவிளக்குகள் பற்றாக்குறையாக உள்ளதால் இருண்டு கிடக்கின்றன.

HIGHLIGHTS

தேனியில் இருண்டு கிடக்கும் விரிவாக்க பகுதிகள்..!
X

பைல் படம்

தேனியில் காந்திநகர், கற்பகம் நகர், விஸ்நாததாஸ் காலனி, கக்கன்ஜிகாலனி, ரத்தினம் நகர், உள்ளிட்ட பல விரிவாக்க பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்குகள் பற்றாக்குறையாக உள்ளது. ஏற்கெனவே நாய் தொல்லை அதிகம் உள்ள நிலையில் டூ வீலரிலோ, நடந்தோ செல்ல முடியவி்ல்லை.

இரவு 7 மணிக்கு மேல் பெண்கள் கூட நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த சிக்கல்களைத் தீர்க்க தெருவிளக்குகள் அமைப்பது மட்டுமே தீர்வாகும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, தேனியில் மட்டும் 3600க்கும் அதிகமான மின்கம்பங்களில் தெருவிளக்குகள் உள்ளன.

விரிவாக்கப்பகுதிகளில் 600 தெருவிளக்குகள் தேவைப்படுகிறது. இங்குள்ள மின்கம்பங்களில் விளக்குகள் அமைக்க மின்வாரியத்திடம் டெபாஸிட் கட்டி தனி வயரிங் இணைப்பு அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் மட்டுமே தெருவிளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியும். இதற்கு நகராட்சி கவுன்சிலின் ஒப்புதல் தேவை. இது குறித்த தீர்மானத்தை நகராட்சி நிறைவேற்றிய பின்னரே அமைக்க முடியும். இதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம். இவ்வாறு கூறினர்.

Updated On: 13 Dec 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...