என்னது..ஒரு கொய்யாப்பழம் 90 ரூபாயா..? அசந்து போகாதீங்க..! படீங்க..!
தேனி மார்க்கெட்டில் விற்கப்படும் தாய்லாந்து கொய்யாப்பழம். ஒரு பழம் எடை 700 கிராம் வரை உள்ளது.
ஒரு கிலோ கொய்யாப்பழத்தின் விலையே 40 ரூபாய் தான். தற்போது சீசன் தொடங்காததால், கொய்யா பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ 80ரூபாய்க்கு விவசாயிகள் விற்கின்றனர். தேனி மாவட்டத்தில் விளையும் கொய்யாப்பழம் ஒரு கிலோவிற்கு குறைந்தது 8 முதல் 10 பழம் வரை இருக்கும். ஆனால் இந்த பழம் சுவையாக இருந்தாலும், சீசன் நேரங்களில் மட்டுமே கிடைக்கும். சீசன் இல்லாத நேரங்களில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், சீசன் நேரங்களில் ஒரு கிலோ பழமே 40 ரூபாய் தான்.
கொய்யாப்பழம் சாப்பிட்டு பழகியவர்கள் (மிகச்சிறந்த மலமிழக்கியாக செயல்படும், வயிற்று பிரச்னைகளுக்கு தீர்வு தரும்) பழம் சாப்பிடாமல் ஒரு நாள் கூட சமாளிப்பது கடினம். இதனை புரிந்து கொண்ட தேனி பழக்கடை வியாபாரிகள் தாய்லாந்து நாட்டில் இருந்து கொய்யாப்பழத்தை இறக்குமதி செய்கின்றனர்.
இந்த பழம் ஒன்றின் எடை மட்டும் குறைந்தது 600 முதல் 700 கிராம் வரை உள்ளது. அவ்வளவு பெரிய பழமாக உள்ளது. இரண்டு பழம் போட்டால் ஒண்ணரை கிலோ எடையினை தொட்டு விடுகிறது. சில்லரை மார்க்கெட்டில் இந்த பழம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. (உழவர்சந்தையில் ஒரு கிலோ 120 ரூபாய்) இதனால் எவ்வளவு எடை வருகிறதோ அந்த எடைக்கு ஏற்ப விலையை கணக்கிடுகின்றனர். இந்த கணக்குப்படி அதிகபட்சம் ஒரு பழம் 90 ரூபாய் வரை விலை கிடைத்து விடும் அளவு பெரியதாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் விளையும் பழத்தை கடித்து சாப்பிடுவது சற்று கடினமாக இருக்கும். தவிர பல்சொத்தை இருப்பவர்கள் தேனி மாவட்ட கொய்யாப்பழத்தை சாப்பிடுவது சிரமம். ஆனால் தாய்லாந்து கொய்யா இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையில் உள்ளது. உள் சதைப்பகுதி சிவப்பு நிறத்துடன் உள்ளது. கடித்து சாப்பிடுவதும் எளிதாக உள்ளது. இதனால் இந்த பழத்தை வாங்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu