தேனி நகராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் தடாலடி திருப்பம்

தேனி நகராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் தடாலடி  திருப்பம்
X

தேனி தி.மு.க.,நகர செயலாளர் பாலமுருகன்

தேனி நகராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் அடுத்தடுத்து தடாலடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

தேனி நகராட்சி தலைவர் பதவி காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தி.மு.க., மேல்மட்ட தலைவர்கள் ஆசியுடன் நகர செயலாளர் பாலமுருகன் மனைவி ரேணுப்பிரியா பாலமுருகன் காங்., கட்சியை எதிர்த்து தலைவர் பதவியை கைப்பற்றினார். தற்போது ஸ்டாலின் உத்தரவுப்படி அவரை ராஜினாமா செய்யுமாறு அவரை தேர்வு செய்தவர்களே வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று இரவு முழுக்க தேனி நட்சத்திர ஓட்டலி்ல் பேச்சு வார்த்தை நடந்தது. ஒரு கட்டத்தில் டென்சனான தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன், 'தேனிக்கு காங்., சேர்மன் தானே வேண்டும். எனது மனைவியை காங்., கட்சியில் சேர்த்து சேர்மனாக அறிவித்து விடுங்கள், நான் எப்போதும் போல் தி.மு.க., நகர செயலாளராகவே தொடர்கிறேன்' என ஒரு குண்டை துாக்கி போட்டார். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அத்தனை பேரும் இதனை கேட்டு மனம் நொந்து விட்டனர். இந்த சிக்கலை தீர்க்கவே முடியாதா? ஆண்டவா? என்ன செய்யப்போகிறோம்? என புலம்ப தொடங்கி விட்டனர்.

Tags

Next Story