தேனியில் அதிகரிக்கும் மாடித்தோட்டங்கள்

தேனியில் அதிகரிக்கும் மாடித்தோட்டங்கள்
X
தேனியில் மாடித்தோட்டங்கள் அதிகரித்து வருவதால், பூச்செடிகள், பல்வேறு வகையான மரக்கன்றுகள் விற்பனை களைகட்டி வருகிறது.

தோட்டக்கலைத்துறை சார்பில் நகர் பகுதிகளில் மாடித்தோட்டங்கள் அமைக்க இலவசமாக விதைகள் வழங்கப்பட்டன. தேனியில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு விதைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதைகள் வளர்ந்து பலன் கொடுத்து வரும் நிலையில், மேலும் பலர் மாடித்தோட்டங்கள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சிறிய அளவில் வளரும் மரக்கன்றுகள், பூச்செடிகளை அதிகம் மாடிகளில் நடவு செய்து வருகின்றனர். கான்கிரீட் மீது, சிமென்ட் பூசி அதன் மேல் ஒரு அடி உயரத்திற்கு மண் நிரப்பியும் சிலர் தோட்டங்களை அமைத்துள்ளனர். இதனால் பலரும் மரக்கன்றுகள், பூச்செடிகளை விரும்பி வாங்குகின்றனர்.

தேனியில் இருந்து தேவதானப்பட்டி வரையிலும் அதிகளவில் தோட்டக்கலை கன்றுகள், செடிகள் உற்பத்தி செய்யும் தனியார் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இந்த பண்ணைகளில் இருந்த வாகனங்களில் கன்றுகளை கொண்டு வந்து தேனியில் தெருத்தெருவாக விற்பனை செய்கின்றனர். ஒரு கன்று அதிகபட்சம் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Tags

Next Story
Similar Posts
Adaippu Natchathiram in Tamil
ரொம்ப ஈஸி... பெஸ்ட்டான வழி..! பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..!
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
விமானங்களின் டயர்கள் வெடிக்குமா? பஞ்சர் ஆகுமா..? அவசியம் தெரியணும்..!
ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தை இந்தியா ஏன் கிரிக்கெட்டில் பயன்படுத்துவதில்லை?
இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை  குறைக்க உதவும் பூண்டு சட்னி
கடற்கரை பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிய புதிய செயற்கைக்கோள் கருவி
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் காலில் தெரியும் அறிகுறி
எல்லாமே மாறப்போகுது.. ஒரே கிளிக்கில் Super App...! ரயில் பயணிகளே!
ai in future agriculture