போடி அருகே வெள்ளத்தில் சிக்கிய மின் வாரிய தற்காலிக ஊழியர் உடல் மீட்பு

போடி அருகே வெள்ளத்தில் சிக்கிய மின் வாரிய தற்காலிக ஊழியர்   உடல் மீட்பு
X
போடி அருகே மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மின்வாரிய தற்காலிக ஊழியர் உடல் 30 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.

தேனி சுக்குவாடன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27) இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார். இரண்டு நாட்களுக்கு முன், தனது நண்பர்கள் பாண்டியராஜன், (26,) குமரேசன், (32,) கோகுல், (27) ஆகியோருடன் சேர்ந்து போடி அருகே ஊத்தாம்பாறை ஆற்றுப்பகுதியில் குளிக்க சென்றார். இவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் பெய்த மழையால் திடீரென காட்டாற்று வெள்ளம் வந்தது. இந்த வெள்ள நீரில் சுரேஷ் அடித்துச் செல்லப்பட்டார். மற்றவர்களும் சிக்கிக் கொண்டனர்.

போடி தீயணைப்பு படையினர் வெள்ள நீரில் சிக்கிய பாண்டியராஜன், கோகுல், குமரேசன் ஆகியோரை உடனடியாக மீட்டனர். சுரேஷ் உடலை தேடி வந்தனர். வெள்ளநீர் வடிந்த பின்னர் (அதாவது 30 மணி நேரத்திற்கு பின்னர்) சுரேஷ் உடல், அவர் வெள்ளத்தில் சிக்கிய இடத்தில் இருந்து நுாறு மீட்டர் தொலைவில் ஒரு ஓரத்தில் கிடந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. குரங்கனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future