தேனியில் கோயில் இடிப்பு: மீண்டும் கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
தேனியில் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க திரண்டு வந்து கோரிக்கை முழக்கமிட்ட பொதுமக்கள்.
தேனியில் ஸ்ரீபட்டாளம்மன்கோயிலை இடித்ததற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாககோயில் பூஜாரி பி.நாகராஜ் தேனி மாவட்டஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், எங்கள் ஊருக்கு அருகில் நாங்கள் வழிபாடு செய்து வருகிற ஸ்ரீபட்டாளம்மன், ஸ்ரீகாளியம்மன்,ஸ்ரீகருப்பசாமி தெய்வங்களுக்கு தலைமை பூஜாரியாக இருந்து வருகிறேன். இந்த கோயில் ஆனது எங்கள் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். 100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். எங்கள்பங்காளிகள் சமுதாயத்தினர் வருடம் தோறும் வைகாசி மாதம்ஒன்றுகூடி மூன்று நாட்கள் விழா எடுப்பதை வழக்கமாக கொண்டு வருகிறோம்.
கடந்த2019ஆம் ஆண்டு எங்கள் கோவில் அருகில் இடம் வைத்திருக்கும் மதுரையை சேர்ந்த டாக்டர்சேகரன் என்பவர் எங்கள் வழிபாட்டுத் தளத்தை இடித்து சேதப்படுத்திவிட்டார். இது சம்பந்தமாக தேனிகாவல்நிலையத்தில் ஆய்வாளர்முருகானந்தத்திடம் மனுகொடுத்து இருந்தோம் மனுவை பெற்றுக் கொண்டு துரித நடவடிக்கை மூலம் டாக்டர் சேகரன் உட்பட மூன்று நபர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்தார்.
அதன் பின்பு கோயிலை புணரமைப்பு செய்து வழிபாடு செய்து வந்தோம் கடந்த 27.01 2023ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் பட்ட பகலில் டாக்டர் சேகரன், டாக்டர் யோகேஷ், செல்வம் என்ற செல்வபிரபு, அசோகன் ஆகிய நான்கு நபர்களும் கோயில் முன்பாக நின்று கொண்டு ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்துக் கொண்டிருந்தார்கள் தகவல் அறிந்து பதறிப் போய் கோயிலை இடிக்காதீர்கள் என்று கூச்சலிட்டேன்.
அதற்கு டாக்டர் சேகரன் உட்பட நான்கு நபர்களும் தகாத வார்த்தைகள் பேசி கீழே கிடந்த கம்பியை எடுத்து அடிக்க வந்தார்கள். நான் பதறிப்போய் கீழே விழுந்து விட்டேன். நான்கு நபர்களும் இடிப்பதற்கு இடையூறு செய்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள்.நான் பயந்து ஓடி வந்து விட்டேன். எங்கள் மத உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்காமல் எங்கள்குல வழிபாட்டு கோயிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்கள். சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதே கருத்தினை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்தார்கள்.
இவருடன் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் பாண்டியாபிள்ளை, நகர அமைப்பாளர் சிவராம், நகர தலைவர் செல்வபாண்டியன், துணை தலைவர் நாகராஜ், நகர பொருளாளர் நாகர்கோவில் இராஜேஷ்குமார், நகர செயலாளர்கள் அரண்மனை முத்துராஜ், புயல் அய்யப்பன், நகர இணை செயலாளர்கள் ஜீவா, ரெங்கராஜ், ஆட்டோ எழுச்சி முன்னணி தலைவர் செந்தில்குமார், சட்ட உரிமை கழகத்தின் மாவட்ட விவசாய அணி தலைவர் செல்வேந்திரன், தேனி நகர தலைவர் தினேஷ்குமார், நகர இளைஞரணி தலைவர் மணிவேல், உறுப்பினர்கள் நாகராஜ், குமரேசன் மற்றும் சமுதாய பெரியோர்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu