கேரள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கச் சென்ற தமிழக விவசாயிகள் கைது

கேரள அதிகாரிகளிடம் விளக்கம்  கேட்கச் சென்ற தமிழக விவசாயிகள் கைது
X

குமுளி தமிழக எல்லையான லோயர்கேம்ப்பில் கைது செய்யப்பட்ட விவசாயிகளில் சிலர் வேனில் ஏற்றப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

மின்வாரிய பணி வாகனங்களை தடுத்தது ஏன்? என கேரள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்ற தமிழக விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

முல்லை பெரியாறு அணையினை பராமரிக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் குடியிருப்பும், தமிழக மின்வாரிய அதிகாரிகளின் குடியிருப்பும் கேரளாவில் வனத்துறை சோதனைச் சாவடிக்கு அடுத்து உள்ளது.

சேதமடைந்த இந்த குடியிருப்புகளை சீரமைக்க தேவையான நேற்று பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற தமிழக வானங்களை கேரள வனத்துறையினர் தடுத்து விட்டனர். இதற்கான விளக்கம் கேட்க இன்று கூடலுாரில் இருந்து முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், பாரதீயகிஷான் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சில விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் சிலர் கேரளா சென்றனர். அவர்களை தமிழக எல்லையில் லோயர்கேம்ப்பில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself