முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாகிவிட்டது :ஓபிஎஸ்
திமுக. அரசின் செயல்பாடுகளை கண்டித்து தேனியில் அதிமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக.அரசின் திறமையற்ற செயல்பாடு காரணமாக முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாக மாறி உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்-றம்சாட்டினார்.
தேனி மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக. அரசினை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சையதுகான், தேனி எம்.பி.,ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ., ஜக்கையன், மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை, மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.,கணேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்டமீனவர் அணி செயலாளர் வைகை கருப்பு, தேனி நகர செயலாளர் கிருஷ்ணக்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நடேசன், சின்னமனுார் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றது. ஏழு மாத ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் நமது உரிமை கேள்விக்குறியாக உள்ளது. திமுக. அரசு திறமையற்ற அரசாக உள்ளது.
இதனை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் அதிமுகவிற்கு உள்ளது. இதனால் திமுக.அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. தற்போது அதிமுகவில் தலைமை பதவிகளுக்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து அமைப்பு கழக பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும். இந்தியாவில் இதர மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் வரியை குறைத்து விலையை குறைத்துள்ளன. திமுக அரசு மட்டும் விலையை குறைக்கவில்லை. இது விடியல் அரசு இல்லை. விடியாத அரசாக உள்ளது. இதனால் தான் திமுகவிற்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டத்தில் அதிமுகவிற்கு அனைத்து மாவட்டங்களிலும் பெரும் ஆதரவு உள்ளது.
ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள். கொடுக்கவில்லை. முல்லை பெரியாறு அணையில் 139 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்ததும் கேரளா வழியாக தண்ணீரை திறந்து விட்டனர். ஆனால், அதிமுக. ஆட்சியில் இதுபோல் நடக்கவில்லை. மூன்று முறையும் முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கி சாதனை படைத்தது.
மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வதாக கூறினார்கள். ஆனால் ரத்து செய்யவில்லை. கூட்டுறவு வங்கிகளில் வைத்திருந்த நகைக்கடனை ரத்து செய்வதாக கூறினார்கள். ரத்து செய்யவில்லை. திமுகஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் தருவோம் எனக் கூறினார்கள். ஆனால் செய்யவில்லை என்றார் ஓபிஎஸ்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu