தமிழக இளைஞர்கள் எதிர்பார்க்கும் காவல் துறை அக்னிபத் திட்டம்
அக்னிபத் ராணுவத்தினர் (பைல்படம்)
Agnipath Agnipath -இந்தியாவின் முப்படைகளிலும் அக்னிபத் திட்டத்தில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சம்பளத்துடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முடித்த பின்னர் அவர்கள் பாதுகாப்பு படைப்பிரிவுகளிலும் தொடரலாம். உள்நாட்டில் பிற அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பணியினை தொடரலாம் என அரசு அருமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு ஒரு தரப்பில் சிறு, சிறு எதிர்ப்புகள் இருந்தாலும் ஒட்டுமொத்த நாடும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளது.
இதேபோல் குறிப்பாக தமிழக போலீஸ் துறையில் மிகப்பெரிய சதவீதம் வரை காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களில் முழு சம்பளம் கொடுத்து நிரப்ப முடியாது. எனவே முதல் ஐந்து ஆண்டுகளுக்கு போலீஸ் அக்னிபத் திட்டத்தை செயல்படுத்தினால் குறைந்தது தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள். ஐந்து ஆண்டுகள் கழித்து அவர்கள் மாநில அரசு பணிக்கோ, மத்திய அரசு பணிக்கோ, பிற தனியார் பணிகளுக்கோ செல்வது அவர்களது விரும்பம் என்ற அடிப்படையில், போலீஸ் அக்னிபத் திட்டத்தை தொடர வேண்டும்.
இந்த திட்டத்தை இந்தியாவின் பிற மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்நாட்டு பாதுகாப்புத்துறைகளில் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் பல கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களின் இந்த கோரிக்கையினை கவனத்தில் கொண்டால் நாடு நலம் பெறும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu