தேனியில் பெண்கள் தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா

தேனியில் நேசம் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா நடந்தது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி வட்டத்தின் சார்பில் நேசம் பெண்கள் தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா தேனியில் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி வட்டத் தலைவர் அபுதாகிர் ராஜா வரவேற்றார். சென்னை யுனிவர்சல் சிண்டிகேட் அதிபர் நைனார் முஹம்மது பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார்.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் சேவை துறையில் மாநிலச் செயலாளர் ஜலாலுதீன், திருச்சி அல் சலாம் இஸ்லாமிய கல்லூரி இயக்குனர் அமானுல்லா, ரோட்டரி சங்க பிரமுகர் சௌந்தரபாண்டியன்,தேனி கவுன்சிலர் பாலமுருகன், அ.ம.மு.க நகரச் செயலாளர், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் காசி மாயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ்வாணன், தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நலப் பேரவை மாநிலத் தலைவர் சம்மட்டி நாகராஜன், சமூக நல்லிணக்க பேரவை கௌரவத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜோசப் சேவியர், திராவிடர் கழக ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் கண்ணன், ஜூனியர் சேம்பர் தலைவர் துரை வேலன்,
பெரியகுளம் வளர்ச்சிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் மணி கார்த்திக், தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் கே. கே. டி பொன்ராஜ் கொந்தாளம், எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் அபூபக்கர் சித்திக், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மணிகண்டன், பெரியகுளம் விளையாட்டுக் கழக செயலாளர் அன்புக்கரசன், செட் பவுண்டேஷன் தலைவர் பொறியாளர் நித்தியானந்தம், தேனி தொழிலதிபர் தெய்வா ஓட்டல் அதிபர் பால்பாண்டி, நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம், நன்செய் பசுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பசுமை செந்தில், இனிது அறக்கட்டளை நிறுவனர் ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா, தொழிலதிபர் பொறியாளர் பாலசுப்பிரமணி, எழுத்தாளர் அம்மு ராகவ், கல்வியாளர் தேவகுமார், ஹோமியோ மருத்துவர் நெல்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற சகோதர சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இஸ்லாமிய நூல்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டன, அறிவுச்சோலை நிர்வாகக்குழு உறுப்பினர் முகமது சபி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி வட்டத்தின் சார்பில் தாஜுதீன் நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu