கூடலுாரில் சாக்கடையில் கிடந்த மருந்து மாத்திரைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கூடலுாரில்  சாக்கடையில் கிடந்த மருந்து மாத்திரைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
X

கூடலூரில் சாக்கடையில் கொட்டப்பட்டிருந்த அரசு மருத்துவமனை மாத்திரைகள் 

கூடலுாரில் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய அரசு மருந்து மாத்திரைகள் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது

தேனி மாவட்டம் கூடலூர் முதலாவது வார்டு மந்தை அம்மன் கோயில் தெரு, வடக்கு ரத வீதியில் உள்ள பெரிய சாக்கடையில் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் விலை உயர்ந்த மாத்திரைகள், சிரிஞ்சுகள், மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சத்து மாத்திரைகள் என பல்வேறு மருந்துகள் குவியல், குவியலாக போடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் கேட்கும் போது, ஸ்டாக் இல்லை. வெளி மார்க்கெட்டில் வாங்கிக் கொள்ளுங்கள் எனக்கூறும் ஊழியர்கள், தற்போது அதனை கொண்டு வந்து சாக்கடையில் கொட்டி உள்ளனர்.

சாக்கடை துார்வார வந்த துப்புரவு பணியாளர்கள் சாக்கடைக்குள் கரண்டியை விட்டு அள்ளும் போது, மாத்திரைகள், மருந்துகள், டானிக்கைகள் வந்தன. இவற்றை வெளியில் குவித்த துப்புரவு பணியாளர்கள் ஒரு நாள் முழுக்க சாக்கடை நீர் வடிவதற்காக போட்டு வைத்திருந்தனர். பின்னர் சாக்கடை நீர் வடிந்த பின்னர் அள்ளிச் சென்று குப்பைக்கிடங்கிற்குள் போட்டனர்.

இந்த மாத்திரைகள், மருந்துகள் வெளியில் கிடந்த போது ஏராளமானோர் மொபைலில் பணம் எடுத்து சமூக வலைதளங்களில் பதி விட்டனர். இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil