முதல்வரை விமர்சித்த அரசு ஊழியர் சஸ்பெண்ட்

முதல்வரை விமர்சித்த அரசு ஊழியர் சஸ்பெண்ட்
X

பைல் படம்.

முதல்வரை விமர்சனம் செய்து முகநுாலில் (பேஸ்புக்) பல்வேறு பதிவுகளை வெளியிட்ட கலெக்டர் அலுவலக ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், இடுக்கி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியராக பணியாற்றி வந்தவர் பிஜூஅகஸ்டின். இவர் தனது முகநுால் பக்கத்தில் (பேஸ்புக்கில்) கேரள முதல்வர் பினராய்விஜயனை பற்றி தொடர்ந்து தவறாக விமர்சனம் செய்து, பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வந்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஷாபி இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜிடம் புகார் செய்தார். இதுகுறித்து இடுக்கி எஸ்.பி., கருப்பசாமி சைபர் கிரைம் போலீசார் மூலம் விசாரணை நடத்தினார். இதில் கேரள முதல்வரை பற்றி கலெக்டர் அலுவலக ஊழியர் தவறான தகவல்களை முகநுால் பக்கத்தில் வெளியிட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிஜூஅகஸ்டினை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்