சூரியநெல்லி கிராமத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள்

சூரியநெல்லி கிராமத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள்
X
Surveillance cameras installed in the village

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தேனியில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள சூரியநெல்லி கிராமம். அடர்ந்த வனப்பகுதிக்குள், தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அழகிய கிராமம் சூரியநெல்லி. இங்குள்ள வியாபாரிகள், விவசாயிகள் சங்கம் சார்பில் 50 லட்சம் ரூபாய் செலவில் கிராமம் முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.

இதன் முழு கட்டுப்பாடும் இடுக்கி மாவட்ட போலீஸ் நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் மட்டுமின்றி, 24 மணி நேரமும் கிராமத்திற்கு வந்து செல்லும் அத்தனை பேரையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இந்த மலைக்கிராமத்தில் எங்கெங்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என்பதை யாராலும் கண்டறியவே முடியாது. அந்த அளவு மிகுந்த தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது போலீசாருக்கு பெரும் உதவியாக இருக்கும் என வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story