தேனி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையம்
பைல் படம்.
தேனியில் முக்கிய ரோடுகளில் 160 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. தவிர தனியார் வீடுகள், குடியிருப்புகள், மில்கள், வர்த்த, வணிக நிறுவனங்களில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டும். தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் குடியிருப்பு சங்க நிர்வாகிகள், வணிகர்கள், தொழிலபதிபர்கள், கேமரா பொறுத்தப்பட்ட தனியார் வீட்டு உரிமையாளர்கள் என அத்தனை பேரையும் அழைத்து, அந்த கேமராக்களின் தொழில்நுட்பம் சேமிக்கும் திறன், பதிவு திறன், பதிவு தன்மை, பதிவுகளை பாதுகாக்கும் தன்மை போன்ற பல விஷயங்களை கற்றுக் கொடுத்து வருகிறது. தேனி நகரில் உள்ள அத்தனை கேமராக்களையும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்கள், நகரங்கள், இணைப்பு ரோடுகள், முக்கியத்துவம் வாய்ந்த ரோடுகள் என அத்தனையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பெரும் பலன் கிடைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் மூன்று செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் ஓரிரு நாளில் கைது செய்யப்பட்டனர். இதற்கு காரணம் கண்காணிப்பு கேமராவில் இருந்த பதிவுகள் தான். தற்போது மாவட்டத்தில் பெருமளவு குற்றச்சம்பவங்கள் குறைந்து விட்டன. இதற்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் தான் முக்கிய காரணம் எனவும் போலீஸ் நிர்வாகம் திட்டவட்டமாக நம்புகிறது. எனவே கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பங்களை முடிந்த அளவு விரிவுபடுத்தவும், அதனை இயக்கவும், பராமரிக்கவும், தனியார், அரசு கேமராக்கள் அத்தனையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும் சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu