பெரியகுளத்தில் கழிவு நீர் கலந்த குடிநீர் சப்ளை: பொதுமக்கள் புகார்

பெரியகுளத்தில் கழிவு நீர் கலந்த குடிநீர் சப்ளை: பொதுமக்கள் புகார்
X

பெரியகுளம் இந்திராபுரி பகுதியில் விநியோகிக்கப்படும் கழிவுநீர் கலந்த குடிநீர்.

Drinking Water Supply -பெரியகுளத்தில் ஒரு மாதமாக கழிவுநீர் கலந்த குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Drinking Water Supply -தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு இந்திராபுரி. இந்த வார்டில் ஒரு மாதமாக கழிவு நீர் கலந்த குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் சாக்கடை கழிவு நீர் கலந்தும், தூர்நாற்றம் வீசியும் குடிப்பதற்கு லாயக்கற்ற தண்ணீரே சப்ளை செய்யப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் இப்பகுதி மக்கள் இப்பிரச்னைக்காக சாலை மறியல் நடத்த முற்பட்டபோது உடனடியாக அங்கு வந்த நகராட்சி அலுவலர்கள் அப்பகுதி மக்களிடம் உடனடியாக சரிசெய்கிறோம் என்று கூறி சென்றனர்.

ஆனால் இன்று வரை சரிசெய்யவில்லை. கழிவுநீர் கலந்த குடிநீரே சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!