தேனியில் வாரச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு: வியாபாரிகள் புகார்

தேனியில் வாரச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு:  வியாபாரிகள் புகார்
X

பைல் பைடம்

வாரச்சந்தையை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியது தேனி வாரச்சந்தையில் வியாபாரம் குறைய காரணம் என வியாபாரிகள் புகார் எழுப்பி உள்ளனர்.

தேனியில் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வந்த வாரச்சந்தையினை சனிக்கிழமைக்கு மாற்றியதால் 50 சதவீதம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் புகார் எழுப்பி உள்ளனர்.

தேனியில் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் செயல்பட்டு வந்தது. தேனி சந்தையில் பொருட்கள் வாங்க, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சிறு வியாபாரிகள் பொருட்கள் வாங்க வருவார்கள்.

தினமும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வந்தது. இந்நிலையில் தேனி வியாபாரிகள் ஒரு சிலரின் சுயநலத்திற்காக நகராட்சி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வந்த வாரச்சந்தையை சனிக்கிழமைக்கு மாற்றியது. கேரளாவிலும், தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் ஞாயிறு விடுமுறை என்பதால், விடுமுறை நாளில் பொருட்கள் வாங்க அவர்கள் அனைவரும் தேனிக்கு வந்தனர். இதனால் வியாபாரம் களை கட்டியது.

இந்நிலையில் சந்தை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டதால், அன்று கேரளா வியாபாரிகளும், பிற மாவட்ட வியாபாரிகளும் வருவது குறைந்து விட்டது. உள்ளூர் வியாபாரிகள், பொதுமக்கள் மட்டும் பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் வர்த்தகம் 50 சதவீதம் வரை சரிந்துள்ளது. தேனி சந்தையில் வியாபாரம் அதிகரிக்க வேண்டுமானால் மீண்டும் சந்தையினை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்ற வேண்டும் என தேனி மாவட்ட வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி