கொரோனாவால் வந்த வினை; தேனி மாவட்ட துணை சுகாதார நிலையங்களுக்கு நேர்ந்த கதி
எருமலைநாயக்கன்பட்டியில் மூடிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்.
2020ம் ஆண்டு பிப்ரவரி முதல் இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது. தொடர்ந்து ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா சிகிச்சைகள், தடுப்பூசி போடும் பணிகள் என அடுத்தடுத்து சுகாதாரத்துறை பரபரப்பாகவே உள்ளது. துணை சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர்கள் தான் இந்த பணிகளில் பெரும்பாலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இவர்களால் இயல்பான பணிகளில் ஈடுபட முடியவில்லை. எந்த நேரமும் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணி, தடுப்பூசி போடும் பணிகள் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் துணை சுகாதார நிலையங்களின் மூலம் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் செய்து வருகின்றனர். இந்த கடும் பணிச்சுமை காரணமாக இவர்களால் துணை சுகாதார நிலையத்தை திறந்து அங்கு வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.
எனவே கொரோனா தொடங்கியது முதல் தற்போது வரை தேனி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்கள் மூடியே கிடக்கின்றன. பொதுமக்கள் தங்களின் மருத்துவ தேவைக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று வருகின்றனர்.
கொரோனா தொற்றினை முழு கட்டுக்குள் கொண்டு வரும் வரை துணை சுகாதார நிலையங்களை வழக்கம் போல் திறந்து இயல்பான சிகிச்சை வசதிகளை அளிப்பது சிரமம் என சுகாதாரத்துறை அதிகாரிகளே தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu