படிப்பா? பணித்திறனா? எதற்கு சம்பளம் அதிகம்?

படிப்பா? பணித்திறனா? எதற்கு சம்பளம் அதிகம்?
X
Tamil Nadu Education News Today -எவ்வளவு படித்திருந்தாலும் ஒருவருக்கு தனித்திறன் இருப்பது சிறப்புக்குரியது. படிப்பைவிட அதுவே பணியில் சிறப்பிடம் பெறும்.

Tamil Nadu Education News Today - இந்தியாவிலேயே கல்வி கற்றோர், கற்போர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தை எட்டி உள்ளது. அரசு வழங்கும் சலுகைகளால் இன்னும் சில ஆண்டுகளில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலை உருவானாலும் ஆச்சர்யப்படலாம். அந்த அளவு தற்போதைய தலைமுறையினர் கல்வியில் உச்சம் தொட்டுள்ளனர்.

அனைவரும் கல்வி பயின்றுள்ள நிலையில், அதற்கு ஏற்ற வேலையும், சம்பளமும் கிடைக்கிறதா? படித்தவர்களை விட உழைப்பவர்களே அதிகம் சம்பளம் பெறுகின்றனரா? அதாவது பணித்திறனுக்கு தான் சம்பளம் வழங்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு ஆம் என்ற பதில் தான் உண்மையில் கிடைக்கிறது. படிப்பை விட பணித்திறன், உழைபிற்கு தான் இப்போது வருவாய் கொட்டுகிறது. குறிப்பாக இன்றை நாளிதழ்களில் "புரோட்டா மாஸ்டர் தேவை! மாதம் முப்பதாயிரம் சம்பளம்" என ஒரு பத்தியிலும், அடுத்த பத்தியில் "இஞ்சினீயர் தேவை மாதம் பனிரெண்டாயிரம் சம்பளம் " எனவும் விளம்பரம் இருக்கும். இதனை அனைவரும் பார்க்க முடியும்.

அதேபோல் இன்று ஒரு கொத்தனார் ஒரு நாளைக்கு ஆயிரம்...ரூபாய்... உதவி ஆளுக்கு எழுநூறு...ரூபாய்...அதேபோல் வயலில் நான்கு மணி நேர வேலைக்கு அறுநூறு... ரூபாய்....உரம் போடுவதற்கு ஒரு மூட்டைக்கு இருநூறு...ரூபாய், கூடவே டீ வடையும்.(அவர் ஒருமணி நேரத்தில் அறுநூறு ரூபாய் சம்பாதிப்பார்.)ஆனால் ஒரு கடையில் பனிரெண்டு மணி நேரம் வேலை பார்ப்பவருக்கு குறைந்தது இருநுாறு ரூபாயில் இருந்து அதிகபட்சம் நானூறு ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. நிற்க! நம் சமுதாயத்தை பொறுத்த வரை ஒருவர் படித்தால் அவருக்கு சம்பளம் அதிகம் என்ற காலம் தற்போது மலையேறிவிட்டது! ஒரு காலத்தில் அன்றாட வேலை பார்த்தவர்கள் ஒரு ரூபாய் வாங்கும் போது படித்தவர்கள் 10 ரூபாய் வாங்கினார்கள். "நான்தான் அன்றாட வேலை பார்க்கிறேன்! என் மகனாவது படித்து நல்லா இருக்கட்டும் "என பெரும்பாலனவர்கள் எண்ணமாக இருந்தது! "அப்ப, படித்தால் சம்பாதிக்க முடியாதா?"என நீங்கள் கேட்பது புரிகிறது.

படிப்பை நாம் சம்பாதிக்க வழிகாட்டியாக வைத்துக் கொள்ளனுமே தவிர அந்த படிப்பே நமக்கு சம்பாதியத்தை தராது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய நிலைமையில் படிப்புக்கேற்ற சம்பாத்தியம் என்பது மருத்துவம் அதற்கு சமமான உயர் படிப்பு இப்படித்தான் இருக்கிறது. தற்போதை சூழ்நிலையில் பார்த்தால் இன்னும் பத்து வருடத்தில் இந்தியாவில் மருத்துவர்களின் நிலைமையும் இஞ்சினீயர் அளவுக்கு கீழே வந்து விடும்.படித்தவனுக்கே சம்பளம் கம்மி, படிக்காதவனுக்கு ஏன் உயர்வு என்றால் இங்கு உழைக்க யாரும் தயாரில்லை!உடல் உழைப்பை யாரும் விரும்புவதில்லை, "நான் படிச்சுட்டேன் ஏன் உழைக்கனும்?" என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

இன்றையத் தேதியில் ஒரு நகரத்தில் நீங்கள் நினைத்தால், ஒரு மணி நேரத்தில் பத்து இஞ்சினீயரை அழைக்கலாம்.ஆனால் ஒரு கொத்தனாரையோ, எலக்ட்ரீசியனையோ, ஏசி மெக்கானிக்கையோ,பெயின்டரையோ, தச்சரையோ அழைக்க ஒரு வாரம் நீங்கள் காத்து இருக்கனும். நாம் என்ன படிச்சா என்ன! முதலில் நாம் உழைக்கக் கற்றுக் கொண்டால் நம் வாழ்வு தானாக உயரும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story