சுதந்திர தினவிழா செஸ்போட்டி; வெற்றி பெற்ற மாணவர்கள்
சுதந்திர தின செஸ்போட்டியில் வென்ற தேனி மாணவர்களுடன், நிர்வாகிகள்.
தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 57-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
போட்டிகளுக்கு அகாடமி செயலாளர் R.மாடசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வனச்சரகர் S. அமானுல்லா முன்னிலை வகித்தார். போட்டிகளை இந்திய ராணுவ மேஜர் சரவணன் தொடங்கி வைத்தார், வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் G.பார்த்தீபன் பரிசுகள் வழங்கினார்.
மாணவர்கள் முதலமைச்சர் கோப்பை போட்டிகளிலும் வெற்றி பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், தேனி மாவட்டத்தில் இருந்தும் கிராண்ட்மாஸ்டர் பிராதானந்தா போல் சாதனை படைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார், முன்னதாக அகாடமி தலைவரும், தமிழ்நாடு மாநில சதுரங்க நடுவருமானா S. சையது மைதீன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகாடமி இயக்குனர் S. அஜ்மல்கான் செய்திருந்தார், நடுவர்களாக K. மேனகா, A. விஷால் ஆகியோர் செயல்பட்டனர்.
வெற்றி பெற்றோர் விபரம்;
Under - 9 - பிரிவில் 1. J.தியாஸ்ரீ, 2, G.ஸ்ரீஜித் 3, A.நித்தின்ராஜ், 4.ஸ்ரீஆக்னேயா 5,A. லோகேஷ் கிருஷ்ணா, 6, R. இஷான், 7, A.கவி அமுதன் 8, N. மோனிஷா 9, B.ஹனிசாக்கிதா 10, S.சர்வேஷ்வர்.
Under - 11பிரிவில் 1. B.சித்தேஷ், 2,P.K.தன்யஸ்ரீ 3, A.ஸ்ரீஹரன் 4,S. சைரஸ் ப்ளசன் 5, R. நிஜிதாஸ்ரீ 6, S. ஜெய்ஹர்ஸ்னி 7, R. சாத்வீகா, 8, V. ஹர்ஸ்னி 9, V.விஸ்வநாத், 10, R. துஸ்யன்ந்.
Open to all பிரிவில் 1, K.ராஜேஸ்வரன், 2, S.K.முத்துபிரனித் 3, S. பரணி 4, J.தியாஸ்ரீ 5, V. ஶ்ரீ கீர்த்திகா. 6, A. கவின்பிரசாத் 7, A. லோகேஷ்கிருஷ்ணா 8, M.ஹரிபிரசாத் 9, S.சாம்செரின்ராஜ், 10,A .திருகார்த்திக் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இளம் சதுரங்க வீரர்களுக்கான பரிசு ஸ்ரீஆக்னேயா , S.சர்வேஸ்வர், S.சிந்துஜஸ்வின், D.மதுகேசவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu