மாணவ, மாணவிகளுக்கு கோட்டூரில் பாராட்டு விழா..!

மாணவ, மாணவிகளுக்கு  கோட்டூரில் பாராட்டு விழா..!
X

கோட்டூர்  அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

கோட்டூரில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

தேனி மாவட்டம் கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் (பதிவு எண் 17/2016) சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகை வழங்கி சாதனையாளர் விருது கொடுத்து கௌரவம் செய்யப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி , ஓய்வுபெற்ற ஆசிரியை விஜயலட்சுமி , ஆசிரியர் தமிழ்வேந்தன் ஆகியோர் ஊக்கத்தொகை வழங்கினார்கள். Eiviro Trend Setter Total water&waste water solution -நிறுவனத்தைச் சேர்ந்த பழனிராஜா மாணவ, மாணவிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கினார்.

ஹீரோ ஸ்டார் தலைவர் ஹீரோ ஸ்டார் ராஜதுரை நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தார். அதனுடன் சமூக சேவகர் புகழேந்தி, ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படும்போது அவர்கள் மற்ற மாணவர்களுக்கு உந்து சக்தியாக விளங்குவார்கள். மற்ற மாணவர்களும் நாமும் படித்து இதைப்போல பரிசுகளும் பாராட்டுகளும் பெறவேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!