பெரியகுளம் அருகே வராகநதியில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 2 பேர் பலி

பெரியகுளம் அருகே வராகநதியில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 2 பேர் பலி
X

கோப்பு படம்

பெரியகுளம் வராகநதியில் குளித்த, வேதபாடசாலை மாணவர்கள் இருவர், நீர்ச்சுழலில் சிக்கி இறந்தனர்.

மதுரையை சேர்ந்தவர் சுந்தரநாராயணன், 20, சென்னையை சேர்ந்தவர் மணிகண்டன், 18. இவர்கள் இருவரும் பெரியகுளம் வேதபாடசாலையில் படித்து வந்தனர். இன்று மதியம் இவர்கள் இருவரும், பெரியகுளம் வராகநதியில் குளிக்க சென்றனர். பலத்த மழை பெய்து வருவதால், நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி, இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து, பெரியகுளம் தீயணைப்புத்துறையினர், அவர்களது உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம், பெரியகுளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story