தேனி அருகே பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க மாணவர்கள் காேரிக்கை
![தேனி அருகே பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க மாணவர்கள் காேரிக்கை தேனி அருகே பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க மாணவர்கள் காேரிக்கை](https://www.nativenews.in/h-upload/2021/09/04/1280161--.webp)
தேனி மாவட்டம் தங்கம்மாள்புரத்தில் இருந்து வாய்க்கால்பாறை அரசு பள்ளிக்கு செல்லும் ரோடு
கடமலை- மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் ஊராட்சியில் இருந்து வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல தார்ரோடு வசதி வேண்டும் என மாணவ, மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டம், கடமலை- மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் ஊராட்சியில் இருந்து வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல மெட்டல் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு அமைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது. இதனால் தற்போது பல இடங்களில் பெயர்ந்து காணப்படுகிறது.
மாணவ, மாணவிகள் இந்த ரோட்டில் நடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. மெட்டல் ரோட்டில் நடப்பது சிரமமாக இருப்பதோடு, அடிக்கடி கால் இடறி பலர் கீழே விழுகின்றனர். எனவே இந்த ரோட்டை தார்ரோடாக மாற்றித்தர வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இந்த ரோட்டை தார்ரோடாக மாற்றும் திட்ட வரைவு தயாராகி உள்ளது. விரைவில் தார்ரோடு அமைக்கப்பட்டு விடும்' என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu