வீரப்ப அய்யனார் மலைக்கோயிலில் துப்புரவுபணி செய்த மாணவர்கள்!
தேனி அல்லிநகரம் வீரப்பஅய்யனார் மலைக்கோயில் வளாக பகுதியில் துப்புரவு பணி செய்த அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள்.
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஒரு வார சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர். முகாமின் முதல்நாளில் பள்ளி வளாகத்தில் துப்புரவு பணி மேற்கொண்டனர். இரண்டாம் நாளில் அல்லிநகரம் வீரப்பஅய்யனார் மலைக்கோயில் வளாகத்தை துப்புரவு செய்தனர். சுமார் 11 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் 16 மாணவர்களும், 9 மாணவிகளும் சேர்ந்து முழு அளவில் துப்புரவு பணிகளை செய்தனர்.
கோயில் பிரகாரம், பக்தர்கள் அமரும் வளாகம், அன்னதான மண்டபம், கோயில் சுற்றுப்பகுதிகள், சுற்றிலும் உள்ள வெளிகளில் இருந்த அத்தனை கழிவுகளையும் முழு அளவில் அகற்றி அவற்றை ஒன்று சேர்த்து தீ வைத்து அழித்தனர். இந்த நிகழ்ச்சியினை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராமுமகேஷ்வரி கண்காணித்தார்.
அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் சிவராமன், பொருளாளர் முருகன், செயலாளர் தாமோதரன், உதவி செயலாளர் வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர். கிராம கமிட்டியினர் என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகளின் துப்புரவு பணி நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கி அவர்களுக்கு தேவைப்படும் அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் அடுத்தடுத்த நாட்களில் பெருமாள் கோயில் வளாகத்தையும் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். மண் பரிசோதனை, சைபர்கிரைம் விழிப்புணர்வு, மருத்துவமுகாம் நடத்துவது, ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுதல் உட்பட பல்வேறு பணிகளை செய்ய உள்ளதாக திட்ட அலுவலர் ராமுமகேஷ்வரி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu