பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தியதால் துாக்கு மாட்டி இறந்த மாணவன்

பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தியதால்  துாக்கு மாட்டி இறந்த மாணவன்
X
தேனியில், தந்தை பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தியதால் மாணவன் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி அம்பேத்கார் நடுத்தெருவை சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் நாகராஜ், 14. இவர் தேனியில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் சன்னாசியை அழைத்து இந்த விவரத்தை தெரிவித்தது. பால் வியாபாரியான சன்னாசி, தனது மகனுக்கு அறிவுரை கூறி, பள்ளிக்கு செல்ல வேண்டும் புறப்பட்டு தயாராக இரு எனக்கூறியுள்ளார். சரி என்று வீட்டு மாடிக்கு சென்ற நாகராஜ், அங்கு துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!