அனுமந்தன்பட்டி : விபத்தில் நர்சிங் மாணவி பலி - பொதுமக்கள் சாலை மறியல்

அனுமந்தன்பட்டி : விபத்தில் நர்சிங் மாணவி பலி -  பொதுமக்கள் சாலை மறியல்
X

விபத்தில் உயிரிழந்த நர்சிங் மாணவி அஜிதா.

அனுமந்தன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி நர்சிங் மாணவி அஜிதா பலியானார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி, 63. இவரது மகள் அஜிதா, 21. இவர் தனியார் நர்சிங் கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவர் தனது தந்தை மற்றும் தாய் ஈஸ்வரி, 45, சித்தி புஷ்பம், 40 ஆகியோருடன் அனுமந்தன்பட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றிருந்தார்.

அப்போது உத்தமபாளையம் நோக்கி வந்த கார் மோதியது. இதில் அஜிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடந்தும் கண்டுகொள்ளாத போலீஸ் நிர்வாகத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் ஒரு மணி நேரம் ரோடு மறியல் செய்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare