தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை விற்றால் கடும் நடவடிக்கை: தேனி எஸ்.பி எச்சரிக்கை

தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை விற்றால் கடும் நடவடிக்கை: தேனி எஸ்.பி எச்சரிக்கை
X
குட்கா, புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.பிரவீன்உமேஷ் டோங்கரே எச்சரித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து ஒரே நாளில் தேனி மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.90,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 17 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் குட்கா மற்றும் புகையிலை விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சம்பந்தபட்ட கடைகளுக்கு சீலிடப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
ai powered agriculture