பெரியகுளத்தில் தெருவிளக்குகள் பராமரிப்பதில் தொடரும் மெத்தனம்
பைல் படம்
இங்கு அடிப்படை வசதியான மின்விளக்கு பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் மெத்தன போக்கு நிலவுகிறது. 30 வார்டுகளில் 1000 த்திற்கும் மேற்பட்ட. தெரு விளக்குகள் உள்ள நிலையில், ஒருபுறம் பல தெரு விளக்குகள் 24 மணி நேரமும் எரிவதும் , பல கம்பங்களில் மின்விளக்குகள் எரியாமலும் சகஜமாக உள்ளது.
கால நிலைகளுக்கு ஏற்றார் போல் தெருவிளக்குகள் இயக்கப்படுவதில் மெத்தனம் காட்டப்படுவதால், சில நாட்களில் மாலை நேரங்களில் 7 மணிக்கு மேல் விளக்கு போடுவதும் , காலை நேரங்களில் 8 மணிக்கு பின் அணைப்பதும் நடக்கிறது.
சில நாட்களில் மாலை 5 மணிக்கே விளக்குகுளை எரிய விடுகினற்னர். அதேபோல் காலை ஐந்து மணிக்கு அணைப்பதும் வாடிக்கையாகி விட்டது. சில நேரங்களில் சில தெருக்களில் விளக்குகள் எரியாமலும், சில நேரங்களில் சில தெருக்களில் அணைக்கப்படாமலும் இருக்கின்றன. இதனால், இரவில் பயணிக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விபத்துகளும் , திருட்டு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
6 உயர் மின் கோபுர விளக்குகளும், ஐந்து சிறிய மின் கோபுர விளக்குகளும் உள்ள நிலையில் அதிலும் பராமரிப்பு மந்த நிலையே காணப்படுகிறது. மேலும் பல மின்கலப் பெட்டிகள் உடைந்த நிலையில், விபத்து ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. பெண்கள் மேல்நிலைப்பள்ளி & வடக்கு பாரஸ்ட் ரோடு சந்திப்பு, அரண்மனை தெரு, தேரடி தெரு போன்ற இடங்களில் போதிய வெளிச்சமின்மை நிலவுவதால் சிறிய மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும்.
தெரு விளக்குகள் பராமரிப்பில் மெத்தனம் போக்கு நிலவுவதால் மின்சார விரயமும், நகராட்சிக்கு மின் கட்டண கூடுதல் செலவும், பொதுமக்களின் வரி பணமும் வீணடிக்கப் படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. எனவே, தெருவிளக்குகள் பராமரிப்பில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu