தேனியில் மாநில சதுரங்க போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

தேனியில் மாநில சதுரங்க போட்டிகள்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
X
தேனியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்று வழங்கப்பட்டது

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சர்வதேச சதுரங்க தினவிழாவை முன்னிட்டு 6-வது மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் 8 வயது, 10 வயது, 14 வயது மாணவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பொதுப்பிரிவினை சேர்ந்தவர்களுக்கும் என (பொதுப்பிரிவுl)என நான்கு பிரிவுகளில் நடந்தன.

தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் அகாடமியின் செயலாளர் ஆர்.மாடசாமி தலைமையிலும், பொருளாளர் S.கணேஷ்குமார், வனசரகர் (ஓய்வு) அமானுல்லா முன்னிலையிலும் நடைபெற்றது. போட்டிகளை தேனி சில்வர் ஜூப்லி லயன்ஸ் கிளப் தலைவர் பாலமுருகன் தொடக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணா நகை மாளிகை மேலாளர் கார்த்திக்கேயன், தேனி மேலப்பேட்டை இந்து நாடர்கள் உறவின் முறையின் ஆட்சி மன்றகுழு உறுப்பினர் கண்ணாயிரம் , அகில இந்திய கட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், தேனி தென்றல் லயன்ஸ் சங்க தலைவர் முருகன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர் அஜ்மல்கான் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார். வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்: 8 வயதுக்கு கீழானோர் பிரிவில்: 1. பிரிதிவீ 2.லோகேஷ் சக்தி 3. தியாஸ்ரீ 4.சென்னிசன், 5.செல்வநிரன்ஜன் Under-10 பிரிவில் 1, ஜித்தேஷ் 2, தேகந் 3, சாய்ரிஷி 4, .அகன்யா 5, கவின் கண்ணன் Under - 14 பிரிவில்: 1.வரதன் 2. S. பரணி 3. பிரத்திவ் பாண்டியன் 4.அஸ்வத் 5. ரகுநாத் பொதுப்பிரிவில்1. சி பின்பவுல்ராஜ் 2. விஷால் 3. சந்துரு 4.முக்தேஷ் 5.சதிஷ்குமார் ஆகியோரும் வெற்றிபெற்றனர்.

சிறந்த பள்ளிக்கான விருது ஆண்டிபட்டி லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இளம் சதுரங்க வீரர்க்கான பரிசினை ஜோவின் தட்டிச்சென்றனர். தேனி, மதுரை, திண்டுகல், திருச்சி, திருப்பூர், கோவை, சென்னை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 130 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அகாடமி நிர்வாகிகள் நவீன், ராஜ்குமார், மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 5 சுற்றுகள் , சுவிஸ் முறை படி விரைவுப் போட்டிகளாக நடைபெற்றன நடுவர்களாக தேனழகன், சரவணன், மேனகா, ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்ச்சி நிறைவில் அகாடமி இணைச்செயலாளர் S.நூர்ஜஹான் நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!