ராணுவவீரரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி
ராணுவவீரரின் தாயாரிடம் தேவாரம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ரூபாய் ஐம்பது லட்சத்திற்கான இழப்பீட்டு தொகை வழங்கினார்.
இந்திய ராணுவத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்த போது ஏற்பட்ட விபத்தில் இறந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்கியது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகேஷ் குமார் (வயது 24). ராணுவ வீரரான இவர், தேவாரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தார். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இராணுவத்தில் துப்பாக்கி சூட்டில் யோகேஷ் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து யோகேஷின் தாயார் நாகரத்தினத்திடம், விபத்து காப்பீட்டு தொகையான ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வங்கி மேலாளர் பால விக்னேஷ் வர பிரசாத் வழங்கினார். அப்போது கேஷ் அதிகாரி ஆஷிக் அப்துல் கனி மற்றும் வங்கி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து வங்கி மேலாளர் பால விக்னேஷ் வர பிரசாத் கூறுகையில், "பாரத ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் அனைவரும், வங்கியில் விபத்து காப்பீடு திட்டத்தின் பயனை பெற முடியும். மேலும் சம்பள கணக்கு இல்லாதோர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,000 மட்டும் செலுத்தினால், எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்கும். மிகவும் எளிதான, பெரிதும் பலன் தரக் கூடிய விபத்து காப்பீட்டு திட்டத்தில் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இணைந்து பயன்பெற வேண்டும்" என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu