தேனி மாவட்டத்தில் மொச்சக்காய் சீசன் தொடக்கம்: ஒரு கிலோ ரூ.50 க்கு விற்பனை

தேனி மாவட்டத்தில் மொச்சக்காய் சீசன் தொடக்கம்: ஒரு கிலோ ரூ.50 க்கு விற்பனை
X

தேனி உழவர்சந்தையில் மொச்சக்காய் விற்பனையில் ஈடுபட்டுள்ள பெண் சங்கீதா.

தேனி மாவட்டத்தில் மொச்சக்காய் சீசன் தொடங்கியது. ஒரு கிலோ மொச்சக்காய் 50 ரூபாய்க்கு விற்பனை.

தேனி மாவட்டத்தில் மொச்சக்காய் சீசன் தொடங்கியது. ஒரு கிலோ மொச்சக்காய் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் விளையும் மொச்சகை்காய்க்கு பிற மாவட்டங்களில் நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக கூடலுார் கழுதைமேடு என்ற மலைப்பகுதியில் விளையும் மொச்சக்காய்க்கு எப்பவுமே கூடுதல் வரவேற்பு கிடைக்கும். மாவட்டத்தில் விளையும் மொச்சக்காய்களிலேயே கூடலுார் மொச்சைக்காய்க்கு சுவை அதிகம்.

தேனி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் சீசன் மும்முரமாக இருக்கும். கார்த்திகை மாதம் விரதம் இருப்பவர்கள் எல்லோரும் அதிகளவில் மொச்சக்காய் பயன்படுத்துவார்கள். இப்போது தொடங்கி உள்ள சீசன் தைமாதம் முடியும் வரை இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி