புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி  சார்பில்  நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
X

லோயர்கேம்ப்பில் ஏழு நாட்கள் நடைபெற்ற என்.எஸ்.எஸ்., முகாமில் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 

NSS Camp News Tamil -ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் லோயர் கேம்பில் 7 நாட்கள் களப்பணி செய்தனர்

NSS Camp News Tamil -ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 7 நாட்கள் லோயர் கேம்பில் நடைபெற்றது. ஏழு நாட்களும் நடந்த களப்பணி முகாமில் நான்கு நாட்கள் வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பு களப்பணிகள் நடைபெற்றன. இந்த நாட்களில் குமுளி வனப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட கண்ணாடி பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் நெகிழிப் பைகள் போன்றவற்றை அகற்றும் பணியில் அலோசிஸ் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

முகாமில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்புடன் பணிபுரிய முறையான கை உரைகள் மற்றும் முக கவசம் போன்றவைகளை கூடலூர் நகராட்சி மூலம் பெறப்பட்டன.குமுளி மலைப்பாதையில் உள்ள வழிபாட்டு தளங்களான வழி விடும் முருகன் கோயில், பகவதி அம்மன் கோயில் வழித்துணை மாதா கோயில் ஆகிய பகுதிகள் மாணவர்களால் தூய்மைப்படுத்தப் பட்டன.

தமிழ்நாடு எல்லைக்குட்பட்ட குமுளி பேருந்து நிறுத்தப் பகுதியில் பெரும்பாலான கழிவு பொருட்கள் அகற்றப்பட்டன. இந்த நாட்களில் பெறப்பட்ட அத்தனை கழிவுகளும் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு கூடலூர் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.

புனித அலோசியஸ் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜஸ்டின் ஆசிரியர் மற்றும் திட்ட துணை அலுவலர்கள் சுரேஷ் மற்றும் குமார் ஆகியோர் இந்த முகாமை சிறப்பாக நடத்திச் சென்றனர்.நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் வனப்பகுதி தூய்மையை தொடர்ந்து மர அடர்த்தி குறைந்த வனப்பகுதியில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மர விதைகளை கொண்ட 8000 விதை பந்துகள் எறியப்பட்டன.

இந்த விதைப்பந்துகளில் புங்கை மரம், தேக்கு தோதகத்தி, வேங்கை போன்ற மேலும் பல்வேறு வகையான மர விதைகள் ஒவ்வொரு பந்திலும் இரண்டு விதைகள் வைத்து விதைப்பந்து உருண்டைகள் பயன்படுத்தப்பட்டன.

இந்தப் பணியினை தேனி மாவட்ட நாட்டு நலப் பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் நேரு ராஜன் விதைப்பந்துகளை வழங்க பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜஸ்டின் மூலமாக அனைத்து நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும் விதை பந்துகளை தேவைப்படும் பகுதியில் மாணவர் வீசி எறிந்தனர்.இந்த விதைப்பந்துகளை தயாரித்து வழங்கிய பள்ளியின் விவசாய ஆசிரியர் மது மற்றும் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பீட்டரை அனைவரும் பாராட்டினர்.

இந்த களப்பணியில் தேனி மாவட்ட வன நல அமைப்பு தலைவர் சதீஷ் தேவையான உதவிகளை செய்தார். நாட்டு நல பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் நேருராஜன், பள்ளித்தாளாளர் சேவியர், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரர் மதலை முத்து, கூடலூர் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகன்துரை, ஆணையர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி, சுகாதார ஆய்வாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai and business intelligence