தேனியில் சமூக நல்லிணக்க சிறப்பு கருத்தரங்கம்
தேனியில் நடந்த சமூக நல்லிணக்க கருத்தரங்கில், புலவர் சீருடையானுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
பேரவை கவுரவத் தலைவர் ஹபிபுல்லா தலைமை ஏற்றார். பேரவை ஒருங்கிணைப்பாளர் அபுதாஹீர் ராஜா வரவேற்றார். உமர் பாரூக் எழுதிய அழ நாடு கட்டுரை நூல் குறித்து முத்துக்குமார், யாழ் ராகவன் எழுதிய சந்தை நாவல் குறித்து அனூரூபா, கூடல் தாரிக் எழுதிய ஆகாயத்தினை கவிதை நூல் குறித்து ராஜபிரபா, அல்லி உதயன் எழுதிய அரண் நாவல் குறித்து தேனி ஜாஹிர் நூல்அறிமுகம் செய்தனர்.
தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தேனி சீருடையான், கோவை விஜயா வாசகர் வட்டம் வழங்கிய புதுமைப்பித்தன் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் காமுத்துரை ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பேரவை தலைவர் முகமது சபி பாராட்டுரை வழங்கினார்.
பேராசிரியர் முனைவர் கவியரவி அப்துல் காதர் "விண்ணாக வேண்டும் மண்" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் தேனி துணைக் காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், தேசிய தென் மண்டல முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவர் மகாராஜன். பெரியகுளம் வளர்ச்சி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் மணி கார்த்திக், பேரவை கவுரவ தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ் ஜோசப் சேவியர், நேசம் மக்கள் நல சேவை மையத்தின் தலைவர் காதர் பிச்சை, உத்தமபாளையம் பேரூராட்சி கவுன்சிலர் ஷேக் கம்ருதீன், வழக்குரைஞர் சத்தியமூர்த்தி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் யாஸ்மின் நிகழ்வுகளை தொகுத்து வழங்க அப்துல் ரகுமான் பாடல்களை வழங்கினார்.
பலநுாறு பேர் பங்கேற்ற இந்நிகழ்வில் அருந்ததி நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu