சமூக ஒழுக்கம்: பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

சமூக ஒழுக்கம்: பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

கூடலுார் திருவள்ளுவர் பள்ளியில் நடந்த கருத்தரங்கில் இன்ஸ்பெக்டர் முத்துமணி பேசினார்.

கூடலுார் திருவள்ளுவர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சமூக ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது

கூடலுார் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

இதில், இன்ஸ்பெக்டர் முத்துமணி பங்கேற்று பேசியதாவது: மாணவ, மாணவிகள் பள்ளிகளிலும், வகுப்பறைகளிலும், வெளியிடங்களிலும் எந்த அளவு சமூக ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களோ, மாணவிகளோ தங்களுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டால், போலீசார் பள்ளியில் எழுதிவைக்கப்பட்டுள்ள எண்ணுக்கு உடனே தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். பல்வேறு வகைகளில் சமூக ஒழுங்கீனங்கள் நடந்து வரும் நிலையில் மாணவ, மாணவிகள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதில், எஸ்.ஐ.,பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி உட்பட பலர் பங்கேற்றனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!