மூதாட்டியிடம் நகையை பறித்த வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

மூதாட்டியிடம் நகையை பறித்த  வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
X
உத்தமபாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்துதப்பி ஓடிய இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்த 67 வயதுடைய மூதாட்டியான சாந்தா என்பவரிடம் குளிர்பானம் வாங்குவது போல நடித்து ஏமாற்றி சாந்தா அணிந்திருந்த 36 கிராம் மதிப்புள்ள 41/2 பவுன் தங்க நகையை இரண்டு நபர்கள் பறித்துக்கொண்டு ஓடி விட்டார்கள்.

இது தொடர்பாக உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து சென்னையைச் சேர்ந்த லோகநாதன் மதுரையைச் சேர்ந்த பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல இடங்களில் திருட்டு வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இரண்டு குற்றவாளிகளையும் உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!