மலைக்கிராம மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் கேரளாவிற்கு கடத்தல்

மலைக்கிராம மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் கேரளாவிற்கு கடத்தல்
X

பைல் படம்

போடி மலைக்கிராம மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது

தேனி மாவட்டம் போடி மலைக்கிராமங்களான மணப்பட்டி, கொட்டகுடி, முட்டம், முதுவாக்குடி, முந்தல், சென்ட்ரல் போன்ற மலைக்கிராமங்களில் பல ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளன. இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் முறையாக கொண்டு போய் சேர்க்க முடியவில்லை.

குறிப்பாக அரிசி, பருப்பு, பாமாயில், ஜீனி உட்பட ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் பகிரங்கமாக பட்டப்பகலிலேயே கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. சோதனைச்சாவடிகளில் இந்த பொருட்களை மலைக்கிராமத்திற்கு வழங்க எடுத்துச் செல்வதாக கூறி, ரேஷன் கடை பணியாளர்களே வாகனங்களில் கடத்திச் செல்கின்றனர்.

தற்போது வழங்கப்படும் அனைத்து பொருட்களும் இது போன்று கேரளாவிற்கு கடத்தப்படுகிறது என பொதுமக்கள் போடி தாலுகா அலுவலகத்தில்பல முறை தொடர்ந்து புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் போடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி