தேனியில் சமகவினர் ஆர்ப்பாட்டம் - மது விற்பனையை தடுக்க கோரிக்கை
தேனி கலெக்டர் அலுவுலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள்.
தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னர் மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியற்ற மது விற்பனை நடக்கிறது. குறிப்பாக மாவட்ட தலைநகரான தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரே, தனிநபர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சி சார்பில், வடக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.தேவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் அரசு பாண்டி, பால்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.ஜெயபெருமாள், சின்னமனுார் நகர இளைஞரணி செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் இதே கோரிக்கையினை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu