சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.12க்கு விற்பதால் விவசாயிகள் கவலை
பள்ளப்படி விவசாயி சண்முகம்
தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்து தேனி மாவட்டத்தில்தான் அதிகளவில் சின்னவெங்காயம் விளைச்சல் உள்ளது. இங்கிருந்து வெங்காயம் வடமாவட்டங்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களுக்கும் செல்கிறது. பெரும்பாலும் தேனி மாவட்டத்தில் விளையும் சின்ன வெங்காயம் மதுரை, திண்டுக்கல் மார்க்கெட்டுகள் மூலமே வட மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது.
தற்போது தேனி மாவட்டத்தில் விளைச்சல் அதிகரித்து அறுவடை மும்முரமாக இருக்கும் நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகளிடம் 12 ரூபாய்க்கு, முதல்தர வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றனர். இரண்டாம் தரம், மூன்றாம் தர வெங்காயத்தின் விலை இன்னும் குறைந்து விட்டது.
தேனி அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயி சண்முகம் கூறியதாவது: குறைந்தபட்சம் முதல்ரக சின்னவெங்காயத்தை கிலோ 25க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே விலை விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகும். தற்போது 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால், நஷ்டமே ஏற்பட்டுள்ளது. சின்ன வெங்காயத்தை பாதுகாக்கும் தொழில்நுட்பமும் விவசாயிகளிடம் இல்லை. வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu